Malaysia

மித்ரா நிதியை அதிகரிக்க பிரபாகரன் நடவடிக்கை எடுக்க வேண்டும் டத்தோ ரமணன் வேண்டுகோள்

பெட்டாலிங்ஜெயா, பிப்.8-

மித்ராவின் நிதியை அதிகரிக்க அதன் புதிய தலைவர் பி.பிரபாகரன்
நடவடிக்கை மேற்கொள்வார் என்று நம்புவதாக தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ ரமணன்் கூறினார்.

இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்கு 100 மில்லியன் வெள்ளி கண்டிப்பாக போதாது.
அதற்கான நிதி அதிகரிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் பலவேறு முயற்சிகளை மேற்கொண்டேன். தற்போது துணையமைச்சராக பொறுப்பேற்றுள்ளேன்.
இதனால் அந்த பதவிக்கு பொறுப்பேற்றுள்ள பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரனை நிதியை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்வார் என்று நம்புவதாக IKMA எனப்படும் Institute Keperasi Malaysia கூட்டுறவு கழகத்தின் நிகழ்அச்சு ஒன்றில் கலந்து கொண்ட போது டத்தோ ரமணன் செய்தியாளர்களிடம் அவ்வாறு தெரிவித்தார்.

மித்ராவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த 100 மில்லியன் ரிங்கிட்டை முழுமையாக பயன்படுத்தி அதற்கான கணக்குகள் அனைத்தும் மித்ரா அகப்பக்கத்தில் வெளியிட்டோம்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் என் மீது நம்பிக்கை வைத்து மித்ரா பணிக் குழுவின் தலைவராக நியமித்தார். அவரின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் உரிய திட்டங்களை வகுத்து அதை வெற்றிகரமாக செய்து முடித்தேன் என்று டத்தோ ரமணன் சொன்னார்.

இந்நிலையில் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் மித்ரா பணிக்குழு தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவ்வேளையில் அவருக்கு எனது வாழ்த்துகள். கண்டிப்பாக நிறைய திட்டங்கள், இலக்குகளை அடிப்படையாக கொண்டு அவர் இந்த பொறுப்பை ஏற்றிருப்பார். அவரின் முயற்சிகள் வெற்றி பெற டத்தோ ரமணன் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

பிரபாகரன் மித்ராவின் நிதியை உயர்த்துவதற்கான முயற்சிகளையும் அவர் மேற்கொள்வார் என்று டத்தோ ரமணன் நம்பிக்கை் தெரிவித்தார்.

தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button