Malaysia

ஜம்ரி வினோத் மலிவு விளம்பரம் தேடுகிறார் போலீஸ் புகார்களுக்கு நடவடிக்கை தேவை தேசிய மஇகா படைத் தலைவர் அண்ட்ரூ டேவிட் கோரிக்கை

கோலாலம்பூர்,மார்ச் 6-
இந்திய மக்களின் நம்பிக்கையை கேவலப்படுத்தும் வகையில் காணொளி வெளியிட்ட ERA.FM அறிவிப்பாளர்களின் விவகாரம் தொடர்பில் அறிக்கை வெளியிட்ட ஜம்ரி வினோத் காளிமுத்துவின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று தேசிய மஇகா பணிப்படைத் தலைவர் அண்ட்ரூ டேவிட் கூறினார்.

ERA FM அறிவிப்பாளர்களின் அந்த தவறான வீடியோ வைரல் விவகாரத்தை வைத்து தவறான அறிக்கை வெளியிட்ட ஜம்ரி வினோத்தின் நடவடிக்கை 3R விவகாரத்திற்கு உட்பட்ட மதம் மற்றும் உணர்வுத் தன்மையைக் கேலி செய்ததுடன் ஆத்திரமூட்டும் மற்றும் அவமதிக்கும் வகையில் இருப்பதால் ஜம்ரி வினோத் மீது நடவடிக்கை தேவை என்று அறிக்கை ஒன்றில் அண்ட்ரூ டேவிட் கூறினார்.

பல இன மக்கள் வாழும் மலேசியாவில் ஒற்றுமையை குழைக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள் ஜம்ரி வினோத் மீது நடவடிக்கை அவசியம். மலேசியர்களின் உணர்ச்சிகளைத் தொட்டு மலிவான புகழ் பெறுவதையும் நோக்கமாகக் கொண்ட அவரது அறிக்கைக்கு எதிராக நான் காவல்துறையில் புகார் அளித்துள்ளேன். நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் மற்றும் பல இன மலேசிய சமூகத்தினரிடையே உள்ள ஒற்றுமையை மறைமுகமாக கெடுக்கும் நோக்கம் கொண்ட குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றுல அண்ட்ரூ டேவிட் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த புனித ரமலான் மாதத்தில் ஜம்ரி வினோத் இது போன்ற காரியங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். உங்கள் பிறப்பையும் பூர்விகத்தையும் மறந்து விடாதீர்கள். YB Datuk Seri DR இன் சவாலை ஏற்று இந்து மதம் குறித்து அதிகம் தெரிந்து கொள்ள வாருங்கள். கேவலமான அறிக்கை வெளியிடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று
மஇகா மத்திய செயற்குழு உறுப்பினருமான
ஆண்ட்ரூ டேவிட் சொன்னார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button