
இந்து அறப்பணி வாரியத்தில் (ஹிந்து எண்டோவ்மென்ட் போர்ட்) தலைவிரித்தாடும் பிரச்சினைகள் சீக்கியர் குர்டுவாடாவில் இந்துக்கள் தலைவராக முடியுமா? இந்து சங்கம் மௌனம் சாதிப்பது ஏன்? வட்டார பேரவைகள் குமுறல்
தேசம் அதிரடி அலசல் குணாளன் மணியம்
கோலாலம்பூர்,ஏப்
4-
இந்து அறப்பணி வாரியத்தில் (ஹிந்து எண்டோவ்மென்ட் போர்ட்)
பல்வேறு பிரச்சினைகள் தலைவிரித்தாடும் நிலையில் மலேசிய இந்து சங்கம் மௌனம் சாதித்து வருவது தொடர்பில் அச்சங்கத்தின் வட்டார பேரவைகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக தேசம் மேற்கொண்ட அதிரடி அலசலில் தெரியவந்துள்ளது.
ஆலயங்களை பாதுகாக்க வேண்டிய இந்து அறப்பணி வாரியத்தின் சேவைகளை இந்து சங்கம் புறக்கணிக்கிறதா? எனும் கேள்வி கூடவே எழுந்துள்ளது.இந்து அறப்பணி வாரியத்திற்கு உட்பட்ட ஆலயங்களுக்கு குறிப்பாக பினாங்கு மாநில ஆலயங்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் இந்து சங்கம் தலையிட மறுப்பது ஏன் என்று வட்டார பேரவையை சேர்ந்த பெயர் குறிப்படி விரும்பான ஒரு தலைவர் கேள்வி எழுப்பினார்.
மலேசியாவில் உள்ள இந்து ஆலயங்களை பாதுகாக்க வேண்டியது இந்து சங்கத்தின் தார்மீக பொறுப்பாகும் என்ற நிலையில் இந்து சங்க தலைமைத்துவம் இதனை செயல்படுத்த தவறி விட்டது. நாடு தழுவிய நிலையில் ஆலயஙகளை பாதுகாக்க வேண்டியது இந்து சங்கத்தின் கடமை என்ற போதும் அது அதனை செய்யவில்லை என்று மற்றொரு வட்டாரப்பேரவை தனது மனக்குமுறலை தேசம் ஊடகத்திடம் வெளிப்படுத்தியுள்ளது.
பினாங்கு மாநிலத்தில் உள்ள ஆலயங்களை பாதுகாக்க இந்து அறப்பணி வாரியம் அமைக்கப்பட்டது. கடந்த காலங்களில் பேராசிரியர் இராமசாமி அதன் தலைவராக செயல்பட்ட நிலையில் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் ராயர் அதன் தலைவராக செயல்படும் நிலையில் ஜூலை மாதம் அவரது பணிக்காலம் முடிவடையும் நிலையில்
தற்போது அதுவும் பறிபோகும் நிலை ஏற்பட்ட போதிலும் இந்து சங்கம் வாய் மூடி மௌனித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்த வட்டாரப்பேரவை கூறியது.
இந்து அறப்பணி வாரியத்தை தாரை வார்த்து விட வேண்டாம் என்று ம.இ.கா தேசிய துணைத்தலைவர்
டத்தோஸ்ரீ எம்.சரவணன் எச்சரிக்கை விடுத்திருந்த போதிலும் அதனை ஒரு சீக்கியரிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது தெரிந்திருந்தும் இந்து சங்க தலைமைத்துவம் மௌனம் காப்பது வேதனையளிப்பதாக அந்த வட்டார பேரவை தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளது.
ஆலய விவகாரத்தில் துள்ளி எழ வேண்டிய இந்து சங்கம் “எங்கனை கேட்டா ஆலயம் கட்டுகிறார்கள்’ என்று கேள்வி கேட்பது முட்டாள்தனமானது. அப்படி கேள்வி கேட்பவர்கள் ஏன் தலைமைத்துவ பதவிக்கு வர வேண்டும்? மஸ்ஜிட் இந்தியா அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரத்தில் என்ன செய்தார்கள்? ம.இ.கா வந்து குரல் கொடுத்தது. பல தலைவர்களும் வந்த நிலையில் இந்து சங்கம் எங்கே போனது என்று அந்த வட்டார பேரவை தலைவர் கேள்வி எழுப்பினார்.
நாடு தழுவிய நிலையில் எத்தனையோ ஆலயங்கள் பிரச்சினைக்கு உட்பட்ட நிலையில் அதனை தீர்க்க வேண்டிய இந்து சங்கம் மௌனித்திருப்பது ஏன்? தேசம் வெளியிட்ட ஒரு செய்திக்கு பிறகு வரும் ஞாயிற்றுக்கிழமை ஆலயங்களுடன் சந்திப்பு ஒன்றை அவசரஅவசரமாக ஏற்பாடு செய்கிறார்கள். தலைமைத்துவ பொறுப்புக்கு வந்த பிறகு இதனை செய்திருக்கலாம். அப்போதே பிரதமருக்கு மகஜர் வழங்கியிருந்தால் மஸ்ஜிட் இந்தியா ஆலயம அதே இடத்தில் நிலை பெற வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என்று மற்றொரு வட்டாரப்பேரவை தனது மனக்குகலை வெளிப்படுத்தியது.
இந்து அறப்பணி வாரியத்தின் இயக்குநராக இருந்த ராமசந்திரன் அப்பதவிக்கு ஒரு சீக்கியர் வரலாம் என்று அறிக்கை விட்டுள்ளார். இதற்கு என்ன காரணம். ஊழல் தடுப்பு ஆணையத்தில் ராமசந்திரன் இரண்டு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் முன்னாள் தலைவர் பேராசிரியர் இராமசாமி வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ஊழல் தடுப்பு ஆணைய நடவடிக்கையில் இருந்து தப்பிக்கவே அப்பதவியை தாரை வார்த்து கொடுக்கிறார்களா? எனும் கேள்வி எழுந்துள்ளது. ஒரு சீக்கிய குர்டுவாரா ஆலயத்தில் இந்துக்கள் தலைவர் ஆக முடியுமா?
அவர்கள் விடுவார்களா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
எல்லாம் முடிந்து இந்து அறப்பணி வாரியம் பறிபோகும் நிலைக்கு தள்ளப்பட்ட போதிலும் இந்து சங்கம் அமைதி காப்பது ஏன்? பினாங்கில் தமிழர்கள் வழிபடும் இந்து ஆலயங்களே அதிகமாக உள்ளன. எனவே பினாங்கு ஹிந்து எண்டோவ்மென்ட் போர்ட் பதவியையும் கைவிட்டுவிட வழிவிடக்கூடாது. இந்து சங்கம் இதையாவது தமிழர்கள் தலைமைத்துவத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லையேல் நம்மிடையே உள்ள விரிசல் இன்னும் அதிகமாகிவிடும் என்று அந்த மலேசிய இந்து சங்க வட்டார பேரவைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.



