
100 – ஆண்டுகால வரலாற்று பதிவை உள்வாங்கி, அதன் அடிப்படையில் பெற்ற தேசிய சுதந்திர ஒப்பந்தத்தின் மீது கேள்வி எழுப்பிட தகுதி உண்டா?
மு.வீ.மதியழகன் கேள்வி
பினாங்கு, மார்ச் 19-
நாட்டின் நடப்பு கல்வி சட்ட சாஷனத்தின் மீது நினைத்தவரெல்லாம் கேள்வி எழுப்புவது இனவாதம் இல்லையா?
ஆளக்கண்டு ஏய்க்குதாம் ஆளமரத்து பிசாசு…
அதுபோல
இன்றய நாட்டின்
நடப்பு கல்வி சட்டத்தின் மீது ஆளுக்கொரு கொள்கையா?..
அப்படித்தான் எனில்
நாட்டின்
சட்ட சாஷனத்துக்கான மரியாதைகள் தான் என்ன? என பினாங்கு பிரமுகர் திரு.மு.வீ.மதியழகன் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்ற தீர்மான விதிமுறை, நீதிபரிபாலத் துறை மேல் கொண்ட நம்பிக்கை…நீதி,
நீதிபதிகள்,
நீதி மன்றங்களுக்கு தான்
என்ன மரியாதை இதனால்,
தலவைச்சவன்
எல்லாம் தலைவன்,
தடி எடுத்தவன் எல்லாம் தண்டலா?
என்னாங்க நடக்குது நம்ம நாட்டுல என வினவினார்.
சீனம் – தமிழ் மொழி பள்ளிகள் மீது விசவாயுவ கொட்டி அழிச்சிட எண்ணும் விசமிகளின் மீது அரசாங்கம் எடுத்த நடவடிக்கைதான் என்ன?.
பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடும் கொள்கைபோல அரசாங்கத்தின் மீதே சந்தேகம் எழுகிறது.
சமீபத்தில் தேசிய பல்கலை கழக முன்னால் பேராசிரியர் தியோ கோக் சியோங் சீனமொழி பள்ளிகள் இனவாத கொள்கையை கொண்டுள்ளதாக குற்றஞ்சாட்டி தனது தாய்மொழி கல்வி மீதே சேற்றை வாறி பூசியதை..
எதிர்த்து சீனர் சமூகத்தினர் செய்திட்ட புகாரின் பேரின் போலிஸ் விசாரணை நடத்தப் போவதான செய்தி போல..
தமிழ்ப் பள்ளிகளின் மீதும் அவதூறு பேசி அழிக்க வேண்டும் என்றதோடு நீதிமன்றம் சென்று தோல்வியும் கண்ட பின்னரும் தமிழ்மொழி பள்ளிகள் மீது கேள்வி எழுப்புவோர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?
என்று
மூவி.மதியழகன்
மேலும் வினா எழுப்பினார்.
தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்



