
ஆசிரியர் பணி என்பது ஒரு கடமை டத்தோஶ்ரீ சரவணன் கருத்து
தஞ்சோங் மாலிம், நவ.20-
ஆசிரியர் பணி என்பது ஒரு கடமை என்று ம.இ.கா தேசிய தலைவர்
டத்தோஶ்ரீ எம். சரவணன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் பணி என்பது தொழில் அல்ல. அது ஒரு கடமை, சேவை எனும் அடிப்படை மனநிலை இருந்தால் மட்டுமே சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
ஆசிரியர் தொழிலிலில் ஈடுபட ஆர்வம் கொண்டிருக்கும் எதிர்கால ஆசிரியர்களுடன் ஓர் இலக்கியப் பகிர்வு நிகழ்ச்சி உப்சி பல்கலைக்கழகத்தில் டத்தோஸ்ரீ சரவணன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் டத்தோஸ்ரீ சரவணன் வருங்கால ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றினார்.
ஆசிரியர்களாகக் கால் பதிக்கவிருக்கும் மாணவர்கள் அனைவருக்கும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் தமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
இந்த நிகழ்வில் தமிழ்ப் பேராயம் சார்பில் கவிப்பேரரசு வைரமுத்து, எழுதிய மகா கவிதை, மரபின் மைந்தன் முத்தையாவின் அன்புள்ள ஆசிரியர்களே, பழகிப் பார்த்ததில் இவர்கள் எனும் நூல்களை இலவசமாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



