Malaysia

“இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை” ஈகை செய்து நோன்புப் பெருநாளை கொண்டாடுவோம் டத்தோஸ்ரீ எம்.சரவணன் வாழ்த்து

கோலாலம்பூர், ஏப்.11-

“இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை”
ஈகை செய்து
நோன்புப் பெருநாளை கொண்டாடுவோம்
டத்தோஸ்ரீ எம்.சரவணன் வாழ்த்து

வெறும் பசியும் தாகமும் நோன்பு அல்ல. மற்ற எல்லா பாவங்களும் இந்த பாவங்களைப் போலவே கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் ஒரு மாதம் நோன்பு இருந்து நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுவதாக ம.இ.கா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூறினார்.

புனித ரமலான் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் நண்பர்களுக்கும் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள். குடும்பத்தோடும், உற்றார் உறவினரோடும், நண்பர்களோடும் மகிழ்ச்சியாய் கொண்டாட மனதார வாழ்த்துவதாக தமது வாழ்த்துச் செய்தியில் டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.

நோன்பு என்பது விரதம் மட்டுமல்ல இந்த மாதத்தில்தான் தர்மங்களும் அதிகம் வலியுறுத்தப் படுகின்றன. ஒவ்வொரு கொண்டாட்டத்தையும் மனிதத்தோடு நாம் பார்க்க வேண்டும். ஆகவே நாமும் வாழ்ந்து பிறரையும் வாழ வைப்போம்.

இந்த விரதத்தை ஒரு சடங்காகக் கருதுபவர்களுக்கு எந்தப் பலனும் இல்லை. தீய சொற்களையும் செயலையும் கைவிடாமல் உண்ணுவதையும் குடிப்பதையும் மட்டும் கைவிட முற்பட்டால் எந்தப் பலனும் கிடைக்காது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை
முஸ்லீம் நண்பர்களுக்கு டத்தோஸ்ரீ சரவணன் மீண்டும் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button