
அடியேன் மகாகவி பாரதியாரின் எள்ளுப்பேரன். கவிஞன். பாடலாசிரியன். இணைய வழி தமிழாசிரியர். தமிழ் என்னும் தெய்வத்தின் பக்தன். இயற்கை நேசன் என் படைப்பில்லத்திற்கு வருக வருக 🙏🙏😊😊
சுடர் விளக்கேந்தி வருதல் போல்
ஒரு பொம்மை குவளையையும் தட்டையும்
ஏந்தி வந்தாள் மகள்
“அப்பா குடிக்கணும்”
என்று என்னிடம் நீட்டினாள்
டீ பருகுவதைப் போல்
நான் தீ பருகினேன்
இல்லாத நெருப்பு கூட
அவள் தருகையில் எத்துணை
இனிப்பாய் இருக்கிறது
#மாமகள்போற்றுதும்




