Malaysia

இனதுவேச பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல் நடத்திய ஒற்றுமை அமைச்சு என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளது? சமூக ஆர்வலர் ஆறுமுகம் செல்லப்பா கேள்வி

 

கிள்ளான், ஏப்.29-
நாட்டில் பல்வேறு இனத்துவேச கருத்துக்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வரும் மதவாதிகள் குறித்து தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ ஹெர் அபு டாகாங் (KPN), இந்துசங்க பொதுச் செயலாளர் மற்றும் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி ஆகியோர் தீர்வு காண கலந்துரையாடல் ஒன்றை அண்மையில் நடத்தியிருந்தனர்.

 

இந்த கலந்துரையாடலுக்குப் பிறகு என்ன சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டது என கிள்ளான் பண்டார் புத்ரி தமிழ் ஆர்வலரும், முன்னாள் இந்திய இளைஞர் மன்ற உறுப்பினரும், சமூக சேவையாளருமான ஆறுமுகம் செல்லப்பா கேள்வி எழுப்பியுள்ளார்.

பிற மதத்தவர்களுக்கு எதிராக இனத்துவேச கருத்துக்களோ, பதிவிடுகளோ, தகவல்கள், புகைப்படங்களாக இருந்தால் உடனடியாக சட்டம் சம்பந்தப்பட்டவர் மீது பாய்கிறது. ஆனால், இந்து மதம் குறித்து பேசினால் எந்த நடவடிக்கையும் இல்லை.
“அவர்களுக்கு வந்தால் மட்டுமே இரத்தம் நம் இந்திய சமூகத்திற்கு வந்தால் அது ரத்தமில்லை என்று நினைப்பவர்கள் முதலில் மாற வேண்டும்
என்று ஆறுமுகம் செல்லப்பா வெகுண்டார் ஆறுமுகம்.

இதுபோன்ற இனத்துவேச கருத்துகளை பரப்பும் மதவாதிகள் மீது பலமுறை காவல் துறையில் புகார் செய்துள்ளேன். எந்தவொரு சட்ட நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டால்தான் மதவாதிகள் கொட்டம் அடங்கும் என்று ஆறுமுகம் தெரிவித்தார்.

ஒற்றுமைத்துறை அமைச்சின் நடவடிக்கை குறித்த அறிக்கைகள் என்னவென்று பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். இம்முறை ஒற்றுமைத்துறையின் துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமியும் இந்து சங்கமும் இந்திய சமூகத்திற்கு இவ்விவகாரம் குறித்து என்ன செய்யப் போகிறார்கள் என்பதை காண ஆர்வமாக இருப்பதாக ஆறுமுகம் குறிப்பிட்டார்.

நாட்டில் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் வெளியிடப்படும் படங்கள், உரையாடல்கள், கருத்துகள்,ஒளி,ஒலிபரப்புகளை சமூக ஊடகங்கள் தடைசெய்ய வேண்டும். பேச விட்டு வேடிக்கைப் பார்க்கக்கூடாது.
இனத்துவேசம் பேசும் மதவாதிகள் பிறப்பிலேயே இந்து மதங்களை தழுவியவர்களே! மறந்து விடக்கூடாது.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பார்வைக்கு ஒற்றுமைத்துறை அமைச்சு இந்த விவகாரத்தை கொண்டு செல்ல வேண்டும். நேரடியாக மதவாதிகளை சட்டத்திற்கு முன் நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நலன் மீது பற்று கொண்ட ஆறுமுகம் செல்லப்பா வேண்டுகோள் விடுத்தார்.

தேசம் செய்திகள் குணாளன் மணியம்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button