Malaysia

கிளை கூட்டங்களை வெகு சிறப்பாக நடத்தியமைக்கு வாழ்த்து, பாராட்டு ம.இ.கா இளைஞர்கள் அடுத்த தேர்தளை நோக்கி பயணிக்க வேண்டும் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வலியுறுத்து

தேசம் செய்திகள் குணாளன் மணியம்

கோலாலம்பூல், ஜூன் 2-

ம.இ.காவினர் குறிப்பாக இளைஞர்கள் அடுத்த பொதுத்தேர்தலை நோக்கி பயணிக்க தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வலன் வலியுறுத்தியுள்ளார்.

நாடு தழுவிய நிலையில் ம.இ.கா கிளைகள் தங்கள் கிளைக் கூட்டங்களை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளதற்கு முதலில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் 16ஆவது பொதுத்தேர்தலுக்கு ம.இ.கா கிளைகள்தான் அடித்தளம் என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

நாடு தழுவிய நிலையில் ம.இ.கா கிளைகள் தங்கள் கிளைக்கூட்டங்களை மிகவும் சிறப்பாக நடத்தி முடித்துள்ளனர். இக்கிளைக் கூட்டங்களில் அதிகமான உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளது ம.இ.கா மீது அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை புலப்படுத்துவதாக தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ம.இ.கா அடுத்த பொதுத்தேர்தலுக்கு தயாராக வேண்டும். இதில் குறிப்பாக ம.இ.கா இளைஞர், மகளிர், புத்ரா மற்றும் புத்ரி பிரிவினர் முக்கியப் பங்காற்ற வேண்டும். இதற்காக கிளை அளவில் அடித்தளம் அபைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு ம.இ.கா கிளைகளும் தத்தம் தொகுதிகளில் மக்களை சந்திக்க வேண்டும் என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.

அதேநேரத்தில் நாடு தழுவிய நிலையில் இருக்கும் ம.இ.காவினர் பொதுத்தேர்தல் வெற்றிக்கு தொகுதிகளை குறி வைத்து பாடுபட வேண்டும். இழந்த தொகுதிகளை மீட்க வேண்டும்; மக்கள் ம.இ.கா மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பது ம.இ.காவின் இலக்காக இருப்பதால் ம.இ.காவினர் அனைவரும் அதற்கேற்ப பாடுபட வேண்டும் என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அனைத்து ம.இ.காவினருக்கும் அறைகூவல் விடுத்துள்ளார்.

நாடு தழுவிய நிலையில் கிளைக்கூட்டங்கள் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இதில் ம.இ.கா உறுப்பினர்கள் பெருமளவில் கலந்து கொண்டிருந்தது அவர்களின் ஆதரவை புலப்படுத்தியது. தற்போது தொகுதி கூட்டங்கள் தொடங்கி விட்டன. அதன்பிறகு மாநில கூட்டங்கள் நடைபெறும். ஆகையால், ம.இ.காவினர் அனைவரும் தொடர்ந்து தங்களின் வற்றாத ஆதரவை வழங்கும்படி தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button