Malaysia

துன் சாமிவேலு அவர்களுக்கு சிலை வைத்து மகுடம் சூட்டி சிம்மாசனம் அமைத்த மாபெரும் தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன்-ரவூப் தொகுதி தலைவர் டத்தோ க.தமிழ்ச்செல்வம் புகழாரம்

தேசம் செய்திகள் குணாளன் மணியம்

கோலாலம்பூர், மே 28-

400 மில்லியன் செலவில் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக சாம்ராஜியத்தை உருவாக்கிய துன் சாமிவேலு அவர்களுக்கு சிலை வைத்து மகுடம் சூட்டி சிம்மாசனம் அமைத்த மாபெரும் தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் என்று ரவூப் தொகுதி தலைவர் டத்தோ க.தமிழ்ச்செல்வம் புகழாரம் சூட்டியுள்ளார்.

தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்ற முதுமொழியை உண்மையாக்கும் வகையில் உருவச்சிலையை அமைப்பதற்காக அனைத்து பணிகளையும் முன்நின்று செய்த ம.இ.கா தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவதன் சொல்வேந்தர் மட்டுமல்ல செயல்வீரர் என்று மாநில ம.இ.காவின் உச்சமன்ற உறுப்பினருமான டத்தோ தமிழ்ச்செல்வன் வர்ணித்துள்ளார்.

ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள துன் சாமிவேலு அவர்களின் உருவச் சிலை 100 ஆண்டுகளுக்கும் மேல் அவரது சாதனைகளை எடுத்து செல்ல காரணமாக இருக்கும் அண்ணன்-தம்பிகளான தான்ஸ்ரீ விக்னேஸ்வரன்-டத்தோஸ்ரீ சரவணன் இருவரும் ம.இ.கா வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதி வரலாறு படைத்துள்ளதாக டத்தோ தமிழ்ச்செல்வன் கூறினார்.

கல்வி மட்டுமே இந்திய சமுதாயத்தை உயர்த்தின் தாரக மந்திரம் என்று 25 ஆண்டுகளுக்கு முன் உணர்ந்த துன் சாமிவேலு, இந்திய சமுதாயத்திற்காக நாட்டில் ஏற்படுத்திய கல்வி புரட்சியை நினைவில் கொண்டு ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் துன் சாமிவேலு அவர்களுக்கு சிலை வைக்க வேண்டும் என்று தமது எண்ணத்தை வெளிப்படுத்திய தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் பொதுநலம் கருதிய தலைவராக மிளிர்கிறார்.

துன் சாமிவேலு அவர்களுக்கு உருவச்சிலை வைக்கப்பட்டதற்கு இந்திய சமுதாயம் பெருமை கொள்ள வேண்டும். டேஃப் கல்லூரி, ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம், எம்ஐஇடி ஆகியவை துன் சாமிவேலுவின் சாதனையின் அடையாளமாக உள்ளதால் 400 மில்லியன் செலவு செய்த தலைவனுக்கு சிறுதுளியில் உருவச்சிலை வைப்பதுதான் உத்தமம் என்பதை உணர்ந்த தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அவர்களும் ஒரு சாதனை தலைவர் என்றால் அது மிகையில்லை என்று டத்தோ தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.

துன் சாமிவேலு உருவச் சிலை 100 ஆண்டுகளுக்கும் மேல் அவரின்
சாதனைகளை எடுத்து செல்லும். ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்ட துன் சாமிவேலுவின் உருவச் சிலை அவருக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும் என்றார் டத்தோ தமிழ்ச்செல்வன்.

துன் சாமிவேலு உருவச் சிலை அடுத்த 100 ஆண்டுகளுக்கு அவரது பெயரை, சாதனையை எடுத்து சொல்லும். இந்த சிலையை ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவிய தான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன்-டத்தோஸ்ரீ சரவணன் இருவரும் வரலாற்று நாயகர்கள் என்று டத்தோ தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button