
மீண்டும் கும்பாபிஷேகம் காச்கிறது கோர்ட்டுமலை பிள்ளையார் ஆலயம் முழு கருங்கல் திருத்தலமாக உருமாறு மகா கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு மிகவும் விமர்சையாக நடைபெறும் தான்ஸ்ரீ நடராஜா அறிவிப்பு
கோலாலம்பூர், ஜூன் 3-
மலேசிய திருநாட்டில் பழமை வாய்ந்த கோர்ட்டு மலை பிள்ளையார் ஆலயம் முழு கருங்கல் திருத்தலமாக மாற்றியமைக்கப்படும் என்று ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் தான்ஸ்ரீ ஆர். நடராஜா கூறினார்.
நாட்டில் பழைமை வாய்ந்த கோர்ட்டு மலை பிள்ளையார் ஆலயம் கடந்த 2012ஆம் ஆண்டு மிகவும் விமரிசையாக நடைபெற்றது. இந்நிலையில்
ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோவில் புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெறுவது நமது மரபாகும் என்பதால் கோர்ட்டு மலை பிள்ளையார் ஆலயம் மீண்டும் கும்பாபிஷேகம் காணவிருப்பதாக தான்ஸ்ரீ நடராஜா தெரிவித்தார்.
அந்த வகையில் உலக மக்கள் அனைவரும் வேண்டுதலையும் முழு முதலாய் நின்று நிறைவேற்றி தந்தருளும் கோர்ட்டுமலை பிள்ளையார் கோயில் தற்பொழுது மீண்டும் புனரமைக்கப்படுகிறது.
ஆலயத்தின் முகப்பு நுழைவாயில், தூண்கள், 32 விநாயகர் பீடங்கள், மணிமண்டபம் அனைத்தும் கருங்கற்களால் அமைக்கப்பட உள்ளதாக நேற்று காலை 11. 00 மணிக்கு மேல் கோர்ட்டு மலை பிள்ளையார் கோவிலில் நடைபெற்ற திருப்பணி தொடக்க பூஜைக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் தான்ஸ்ரீ நடராஜா அவ்வாறு சொன்னார்.
பக்தர்கள், ஆதரவாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இம்முடிவை தேவஸ்தானம் எடுத்துள்ளது. தங்க விமானம் மீண்டும் மெருகூட்டப்பட்டு மகா கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு மிகவும் விமர்சையாக நடைபெற உள்ளது என்று டான்ஸ்ரீ நடராஜா தெரிவித்தார்.
கோர்ட்டு மலை பிள்ளையார் கோவிலில் தலைமை குருக்கள் சிவஸ்ரீ சிவக்குமார் ஆகம முறைப்படி பூஜையை நடத்தி வைத்தார்.
மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம் சரவணன், சைபர் ஜெயா பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர் தான்ஸ்ரீ பாலன், ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் அறங்காவலர் டத்தோ சிவகுமார், சந்திரசேகரன், நாராயணசாமி, பொருளாளர் டத்தோ அழகன், செயலாளர் சேதுபதி உட்பட தேவஸ்தானத்தின் வாரிய உறுப்பினர்கள் திரளாக கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



