DevotionalsMalaysia

புந்தோங் ,ஶ்ரீ மகா‌‌ அன்னபூரணி சமேத அன்னபூர்னேஸ்வரர் சுவாமி மற்றுமா நாகமுத்து மாரியம்மன் சக்தி ஆலயம் கும்பாபிஷேகத்தில்‌ பெண்களுக்கு அங்கீகாரம் வழங்கிய‌ காயத்திரி அம்மா

ஈப்போ, ஜூன் 1-
புதிதாக‌ நிறுவப்பட்ட ஆலயம் அல்லது 12 ஆண்டுகளுக்கு பின்னர்‌ புதிதாக சீரமைக்கப்பட்ட ஆலயத்திற்கு நடைபெறும் உன்னத நிகழ்வு கும்பாபிஷேகமாகும்.

அந்த வகையில் பெண்களுக்கு பல சமய நிகழ்வுகளில் பெரிய முக்கியத்துவம் இல்லை.

அதனை நிறைவு செய்யும்‌ வண்ணம் கு.காயத்திரி‌‌ அம்மா ஶ்ரீ மகா‌‌
அன்னபூரணி சமேத அன்னபூர்னேஸ்வரர் சுவாமி மற்றும் நாகமுத்து மாரியம்மன்‌ சக்தி ஆலயத்தின்‌‌ கும்பாபிஷேகத்தில்‌ பெண்களுக்கு அங்கீகாரம் வழங்கியது‌ பலருக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.

உலகிலுள்ள பலரின்‌ அன்புக்கு இலக்கணமாக‌‌ இந்த ஆலயம் விளங்கியதாக காயத்திரி அம்மா கூறினார்.

இந்த நிகழ்வில் பூர்வாங்க விக்னேஸ்வர பூஜை தொடங்கி அனைத்து பூஜைகளும்‌ சிறப்பாக நடைபெற்றது.

பக்தர்கள் மனம் குளிர அன்னதானம் வழங்கப்பட, அனைவரும்‌ இல்லங்களுக்கு அழகான‌ குட்டி சிவலிங்கம் நந்தியுடன் சென்றனர்.

மக்களுக்கான‌ ஆலயமாக இந்த‌ தளம்‌ விளங்குவதால்‌ மக்களின்‌ஆதரவு வேண்டும்.

இது தொடர்பாக தன்னை தொடர்பு கொள்ளலாம்‌ என காயத்திரி‌ அம்மா‌ கூறினார்.

இந்த ஆலயத்தில் பூ குளியல் பக்தர்களின் நலன் கருதி இலவசமாக மாலை 4 மணி தொடங்கி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button