
தஞ்சோங் ரம்புத்தான் தமிழ்ப்பள்ளி மாணவி டிவ்யாஷனி கிருஷ்ணன் எஸ்பிஎம் தேர்வில் 10 ஏக்கள் பெற்று சாதனை
தஞ்சோங் ரம்புத்தான் தமிழ்ப்பள்ளி மாணவி டிவ்யாஷனி கிருஷ்ணன் எஸ்பிஎம் தேர்வில் 10 ஏக்கள் பெற்று சாதனை
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
ஈப்போ, ஜூன் 1-
தஞ்சோங் ரம்புத்தான் தேசிய இடை நிலைப்பள்ளி
மாணவி டிவ்யாஷனி கிருஸ்ணன் எஸ்.பி.எம் தேர்வில்
தமிழ்மொழி உட்பட தேர்வுக்கு அமர்ந்த 10 பாடங்களிலும் ‘ ஏ’ பிளாஸ் சிறந்த அடைவு நிலையை பெற்று பெற்றோருக்கும் பள்ளிக்கும் பெருமையக
தேடி தந்துள்ளார்.
வசதி குறைவு சூழல் இருப்பின் கஸ்டம் கல்விக்கு
இடையூறாக இருந்தாலும் அதனை ஜீரணைத்து
கல்வி ஒன்றே உயிர் என்று மனதில்
பதிய வைத்து கற்றதால் இந்த முடிவு தமக்கு கிடைத்தது என்று அகம் மகிழ்வதாக டிவ்யாஷனி தெரிவித்தார்.
இவரின் அளப்பரிய
சாதனையை கேள்வியுற்ற 1999 ஆம் ஆண்டு உலு கிந்தா இடை நிலைப்பள்ளியில்
பயின்று தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு
கல்வி உதவி வழங்கிவரும்
இந்திய அன்பர்கள்
சார்பாக உலு கிந்தா போலிஸ் சார்ஜன் யோகேந்திரன் மாதவன் ஏற்பாட்டில்
இம் மாணவிக்கு 1,300 வெள்ளி ஊக்குவிப்பு தொகை வழங்கி ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கப்பட்டது.
ஈப்போ ஜெலாப்பாங் கார்சம் தொழிற்ச்சாலை இந்தியர் கிளாப்
ஒரு கணிசமான தொகை தந்தது.
தமிழ்ப்பள்ளி ஆதரவாளர்கள்
முரசொலி மாறன் முனியாண்டி, உதயவாணன் திருமலை, ஓய்வு பெற்ற போலிஸ் சார்ஜன் அண்ணாமலை சின்னசாமி, மதியழகன் இராமன் ஆகியோர் இந்த உன்னத உதவி நல்கியவர்
பட்டியலில் இடம்
பெற்றுள்ளனர்.



