Malaysia

அனைத்து அமைச்சு மற்றும் அரசாங்க கடனுதவித் திட்டங்கள் மூலம் இந்திய தொழில்முனைவர்கள் பயனடைய வர்த்தக சங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் நிவாஸ் ராகவன் உறுதி

தேசம் செய்திகள் ரேவதி குணாளன் ஒளிப்பதிவாளர் ஹரிஸ்ரீநிவாஸ்

கோலாலம்பூர், ஜூன் 12-
அமைச்சு மற்றும் அரசாங்கக் கடனுதவித் திட்டங்கள் மூலம் இந்திய வர்த்தகர்கள் பயனடைய KLSICCI சங்கம் உதவும் என்று அதன் தலைவர் நிவாஸ் ராகவன் கூறினார்.

சிறு, குறு, நடுத்தர வணிகர்கள் பயன் பெறும் வகையில் தெக்குன் ஸ்பூமி திட்டத்தின் வாயிலாக 30 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
அது போலவே மகளிர் வர்த்தகர்களுக்காக அமானா இக்தியாரின் பெண் திட்டத்தின் கீழ் 50 மில்லியன், பேங்க் ரக்யாட்டில் 50 மில்லியன் என கடனுதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இக் கடனுதவித் திட்டங்கள் முறையாக இந்திய வர்த்தகர்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதற்காக தெக்குன் ஸ்பூமி குறித்த விளக்கக் கூட்டத்தை சங்கம் ஏற்பாடு செய்தது.
இந்த விளக்கக் கூட்டத்தில் 200க்கும் மேற்பட்ட இந்திய வர்த்தகர்கள் இதில் கலந்துக் கொண்டதாக நிவாஸ் ராகவன் தெரிவித்தார்.

இந்தக் கடனுதவிக்கு விண்ணப்பிப்பது உட்பட அனைத்து விளக்கங்களும் வழங்கப்பட்டது. இதில்
தெக்குன் அதிகாரிகள் வருகை தந்து விளக்கமளித்தனர். இந்திய வர்த்தகர்களுக்கு இது பெரும் பயனாக இருந்தது. இதன்வழி
அதிகமான இந்திய வர்த்தகர்கள் பயனடைய வேண்டும் என்று நிவாஸ் ராகவன் சொன்னார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button