
துன் வீ தி சம்பந்தன் ஒரு சகாப்தம்
ஈப்போ, ஜுன் 21- இந்நாட்டின் சுதந்திர தந்தைகளின் ஒருவரான துன் வீ தி சம்பந்தன் ஒரு முன்னுதாரண மனிதநேய பண்பாளர் என்றால் மிகையாகாது.
இந்நாட்டின் சுதந்திரத்திற்கு போராட்டவாதியாக்கவும், இந்திய சமூகத்தின் தலைவனாகவும் பொறுப்பேற்று தம் பணியை திறம்பட முடித்த தமிழ்தாயின் திருமகனாக விளங்கியவர் என்று பாராட்டினார் பிரதமர் துறையின் சட்டத்துறை இலாகாவின் துணையமைச்சர் மு.குலசேகரன்.
அன்றைய காலத்திற்கு ஏற்றவாறு அன்றைய சூழ்நிலைக்கு தக்கவாறு பல்வேறு சமூகநலத்திட்டங்களை இந்த இந்திய சமூகத்திற்கு கொண்டு சேர்த்தவர். குறிப்பாக, அன்றைய காலகட்டத்தில் தோட்டங்கள் துண்டாடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதனால், அத்தோட்டத்தை சேர்ந்த மக்கள் அத்தோட்டங்களை விட்டு வெளியேறும் ்நிலைப்பாடு உருவாகியது. இதனால் பல சவால்களை இன்னல்களையும் இந்திய மக்கள் எதிர்நோக்க வேண்டியிருந்தது அவர் வருத்தமாக குறிப்பிட்டார்.
இப்பிரச்சினைகள் களைவதற்கு நம் இந்திய சமூகமே இத்தோட்டத்தை்வாங்க வேண்டுமென்ற உன்னத நோக்கத்திற்காக , ஒவ்வொரு இந்திய குடும்பத்தாரிடம் 10 ரிங்கிட் வசூல் செய்து பல தோட்டங்கள் வாங்கிய பெருமை அவரையே சாரும் என்று அவர் அவரை பாராட்டினார்.
அதுமட்டுமின்றி, அன்றைய காலத்தில் சட்டத்துறை பயில வண்டன் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அவ்வேளையில் லண்டனில் பல மலேசிய இந்திய மாணவர்கள் நிதி பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்தனர்.
அங்கு இந்த மாணவர்களுக்கு கைகொடுத்து நிதியுதவி வழங்கியவர் துன் என்று அவருக்கு புகழாரம் சூட்டினார் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.குலசேகரன்.
அன்றைய காலத்தில் 60 ம் ஆண்டுகளில் தோட்டங்கள் வாங்கும் நடவடிக்கைகளை துன் மேற்கொண்டபோது , அவருடன் சென்று வருவது வழக்கமான ஒன்றாகும். அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்து வந்த இந்திய சமூகத்தினர் ஒற்றுமையாக இருந்தது இல்லை; இன்று புறநகர்களிலும் நகர்களிலும் வாழும் இந்தியர்களும் அதுபோலவே ஒற்றைமையாக இல்லை என்று இந்நிகழ்வில் கலந்துக்கொண்ட போது வருத்தமாக கூறினார் தேசிய நில நிதி கூட்டுறவு கழகத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ சகாதேவன்.
இந்நிகழ்வின் சிறப்பு பிரமுகராக சட்டத்துறை துணையமைச்சர் மு.குலசேகரன், தேசிய நில நிதி கூட்டுறவு கழகத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ பா. சகாதேவன், துன் சம்பந்தனின் புதல்வி வழக்கறிஞர் தேவகுஞ்சரி சம்பந்தன், விரிவுரைஞர் திருஞானசம்பந்தன் முத்துசாமி மற்றும் பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



