
பிள்ளைகளின் திறமையை வளர்க்க நிகழ்வுகளை நடத்தும் ஜி.கே. மது மம்மி கிச்சன் பி.யுவராஜ் பேரூரை
ஈப்போ, ஜூன் 24-
இன்றைய நவீன காலக்கட்டத்தில் பலர் சொந்த தொழில் செய்து வருகின்றனர். ஆனால், வருங்கால சந்ததியினரின் நன்மையை பற்றி யோசிப்பவரின் எண்ணிக்கை குறைவு தான். ஆனால், ஜி.கே. மது மம்மி கிச்சன் மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் நோக்கத்தில் பெரிய அளவிலான வர்ணம் தீட்டும் போட்டியை நடத்தியுள்ளனர். இது சமூக பொறுப்பை காட்டுகிறது என ஈப்போ கிந்தா சமூகநல, விளையாட்டு , பண்பாட்டு சங்கத்தின் தலைவர், பி.யுவராஜ் தெரிவித்தார்.

கேத்தரிங், உணவு ஆர்டர் என்று இல்லாமல் மாணவர்களுக்கான போட்டிகளை நடத்தி வருகின்றனர். இதை மற்ற நிறுவனங்களும் பின்பற்றினால் மிக சிறப்பாகும் என கிட்ஸ் பேஸ் நிகழச்சியை தொடக்கி வைத்த அவர் கூறினார்.
பிள்ளைகளை இது போன்ற நிகழ்வுகளுக்கு அனுப்பிய பெற்றோர்களுக்கும் பாராட்டுக்கள். எங்கள் சங்கமும் இது போன்ற நிகழ்வுகளுக்கு ஆதரவளிப்போம் என்றார்.
7 வயது தொடங்கி 15 வயது வரையிலான மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்று பரிசுகளை பெற்றனர்.
ஜி.கே. மது மம்மி கிச்சன் ஏற்பாட்டிலான இப்போட்டியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.



