Malaysia

கிளேபாங் தமிழ்ப்பள்ளியின் இணைக்கட்டடம் நிர்மாணிக்க 2.8 மில்லியன் ரிங்கிட் மானியம் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பள்ளியில் இசைக்குழு உருவாக்க அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.

ஈப்போ, ஜுன். 24-

கிளேபாங் தமிழ்ப்பள்ளியின் இணைக்கட்டடம் நிர்மாணிக்க 3.8 மில்லியன் ரிங்கிட் தேவைப்படுகிறது.

அண்மையில் 1 மில்லியன் ரிங்கிட் மானியம் அரசாங்கம் வாயிலாக கிடைத்து விட்டது..மேலும் 2.8 மில்லியன் ரிங்கிட் மானியத்திற்கு பிரதமர் துறை இலாகா வாயிலாக ஏற்பாடு செய்தாகி விட்டது. அந்த மானியமும் விரைவில் கிடைத்துவிடும் என்று இப்பள்ளியின் 70ஆம் ஆண்டு திடல்தடப் போட்டி விளையாட்டை தொடக்கி வைத்தபோது தம்புன் நாடாளுமன்ற தொகுதியின் பிரதமரின் சிறப்பு அதிகாரி ஆர்.சுரேஸ் குமார் கூறினார்.

இந்த மீதமுள்ள தொகை பள்ளி மேலாளர் வாரிய வங்கி கணக்கில் பணம் கிடைக்கப்பெற்றவுடன் இணைக்கட்டட கட்டுமானப் பணிகளை தொடங்லாம் என்று அவர் அறிவிப்பு செய்தார்.

இந்த மானியம் கிடைக்கப் பெறுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக நடந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த பள்ளியில் மாணவர்கள் இசைக்குழு ஒன்று நிறுவப்படவுள்ளது. இந்த இசைக்குழு அமைப்பதற்கு முழு ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்கப்படும். அதிகமான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட இப்பள்ளியில் இந்த இசைக்குழு அமைப்பது சாத்தியமாகும். இந்த இசைக்குழு அமைக்க முழு உதவியும் வழங்கப்படும் என்று அவர் கருத்துரைத்தார்.

தற்போது தம்புன் நாடாளுமன்ற தொகுதியில் 35 வயதிற்குட்பட்டவர்கள் டிப்ளோமா அல்லது டிகிரி பட்டப்படிப்பை தொடர கல்வி நிதியுதவிகள் வழங்கப்படவுள்ளது. இந்த குறிப்பிட்ட வயதிற்குட்பட்டவர்கள் அதாவது தம்புன் தொகுதி வாக்காளர்களிக்கு இந்த உதவி நல்கப்படுகிறது. இதற்காக, 5 இலட்சம் கல்வி நிதியுதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுளளதாக அவர் தெரிவித்தார்.

இந்த திடல் தடப் போட்டியின் சிறப்பு பிரமுகர்களாக இப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர்களான பழனிச்சாமி மற்றும் சின்னசாமி ஆகியோரை பள்ளித் தலைமையாசிரியர் சி.விஜயன் கெளரவித்தார்.

அத்துடன், இந்த போட்டி விளையாட்டிற்கு உதவிய ஆதரவு வழங்கிய நன்கொடையாளர்களை பள்ளி மேலார் வாரியத்தலைவர் மு.கிருஷ்ணசாமி சிறப்பு செய்தார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button