
பிரதமர் அன்வாருக்கு எதிரான பேரணி சட்டவிரோதமானது காவல்துறை எச்சரிக்கை
கோலாலம்பூர்,ஜூன் 27-
‘Rakyat Lawan Anwar’ பேரணியின் ஏற்பாட்டாளர்கள் அமைதிப் பேரணிச் சட்டத்தின் (சட்டம் 736) கீழ் புத்ராஜெயா மாநகரமன்றத்திடம் அனுமதி பெறத் தவறியதால் அவர்கள் அப்போராட்டதை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் ருஸ்டி இசா கூறினார்.
இந்தப் பேரணி சட்டவிரோதமானது என்பதால் சனிக்கிழமை நடத்தத் திட்டமிடப்பட்ட பிரதமர் அன்வாருக்கு எதிரான பேரணியில் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என்று ருஸ்டி இசா கேட்டுக் கொண்டார்.
இந்த பேரணியை நடத்த வேண்டாம் என்று Gerakan Demi Negara இயக்கத்திற்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அவர்கள் ஐந்து நாட்களுக்கு முன்பு நிபந்தனைகளின்படி காவல்துறைக்கு ஜூன் 14-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.
Gerakan Demi Negara பேரணியைத் நடத்தினால், நோட்டீஸ் கொடுக்கத் தவறியதற்காக 736 சட்டத்தின் 9(5) பிரிவின் கீழ் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்குவார்கள் என்று ருஸ்டி இசா கூறினார்.
புத்ராஜெயாவிலுள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான ஶ்ரீ பெர்டானாவுக்கு முன்புறம் இந்தப் பேரணி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



