Malaysia

“அன்வார் சொன்னதை செய்யும் பிரதமர்” இந்திய மாணவர்கள் மெட்ரிகுலேஷன் வாய்ப்புக்கு விண்ணப்பம் செய்யுங்கள் டத்தோ ரமணன் வேண்டுகோள்

தேசம் செய்திகள் குணாளன் மணியம்
ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

சுங்கைபூலோ,ஜூலை 13-
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சொன்னதை செய்யக்கூடிய பிரதமர் என்பதால் இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் வாய்ப்பு கிடைக்கும் என்று தொழில் முனைவோர் கூட்டுறவு மேம்பாட்டு துணையமைச்சர் டத்தோ ஆர்.ரமணன் கூறினார்.

எஸ்பிஎம் தேர்வில் 10ஏ அல்லது அதற்கும் மேல் தேர்ச்சி பெறும் அனைத்து மாணவர்களுக்கும் மெட்ரிகுலேஷன் கல்வி வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அண்மையில் அறிவித்திருந்தார். அவர் சொன்னதை செய்வார் என்று டத்தோ ரமணன் உறுதியளித்தார்.

இந்த மெட்ரிகுலேஷன் விவகாரத்தை சிலர் அரசியல் நோக்கத்தில் பார்க்கின்றனர். மெட்ரிகுலேஷன் வாய்ப்பு கிடைக்குமா? கிடைக்காதா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது குறித்து கேள்வி எழுப்புவதை காட்டிலும் முதலில் மனு செய்ய வேண்டும் என்று ரமணன் ஆலோசனை கூறினார்.

மாணவர்கள் மனு செய்த பிறகு வாய்ப்பு கிடைக்காவிட்டால் எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். அதற்காக இதனை அரசியலாக்க முயல வேண்டாம் என்று சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஆர். ரமணன் இதனை தெரிவித்தார்

பிரதமர் அன்வாரின் இந்த அறிவிப்பை சிலர் சர்ச்சையாக்கி வருகின்றனர். பூமிபுத்ரா மாணவர்களை பாதிக்காமல் மற்ற மாணவர்களுக்கு வாய்ப்பு எப்படி கிடைக்கும் என்று கேள்வி எழுப்பி வருகிறனர்.

பிரதமர் தான் கொடுத்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவர் என்று நான் நம்புகிறேன். நம்பிக்கை எனக்கு உண்டு. இதற்கு மாணவர்கள் முறையாக அதற்கு விண்ணப்பிக்க வேண்டும். தகுதி இருந்தும் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் பிறகு நடவடிக்கை எடுப்போம் என்று டத்தோ ரமணன் சொன்னார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button