Malaysia

ஆல்ஃபா க்வின் ஷாலினி தகவல்,தொடர்பு சட்டத்தின் கீழ் ஏன் குற்றஞ்சாட்டப்படவில்லை? ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர் தினாளன் ராஜகோபாலு கேள்வி

கோலாலம்பூர்,ஜூலை 18-
ஈஷா என்ற ராஜேஸ்வரி அப்பாவுவின் இணைய மிரட்டல் வழக்கில் ‘ஆல்பா க்வின்’ ஷாலினிக்கு வெறும் 100 வெள்ளி மட்டும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக
ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர் தினாளன் ராஜகோபாலு கூறினார்.

“ஷாலினி சிறு குற்றச் சட்டம் 1955இன் பிரிவு 14 இன் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 100 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஈஷாவை இணையபகடிவதைக்கு உள்ளாக்கிய மற்றொரு நபரான பி. சதீஸ்குமார் மீது பிரிவு 233 (1) (a) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.

தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998இன் இவர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். இச்சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 50,000 வெள்ளி அபராதம் அல்லது ஓராண்டு ஆண்டு சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

“சதிஷ்குமார் போன்று தகவல் தொடர்புச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியதாக ஷாலினி மீதும் ஏன் குற்றம் சாட்டப்படவில்லை? என்பதுதான் கேள்வி. ஷாலினியை பிரதிநிதித்த குழு திறமையானவர்களாக இருக்கலாம். இதனால் சிறு குற்றச் சட்டம் 1955 இன் கீழ் பெண் குற்றச்சாட்டப்பட்டது. இது தீர்ப்பு மிகவும் மென்மையானது. இது பலனளிக்காது என்று தினாளன் தெரிவித்தார்.

இந்த நாட்டில் சைபர் மிரட்டல்கள் மிகவும் அதிகமாக உள்ளது, எந்தக் கட்டுப்பாடும் இல்லாத பல போலி சமூக ஊடக கணக்குகள் உள்ளன. ஈஷா போன்ற பாதிக்கப்பட்டவர்களின் உயிரைப் பறிக்கும் பல்வேறு தீங்கிழைக்கும் மற்றும் அவமதிக்கும் கருத்துகளை ஒரு சிலரால் வெளியிட முடிகிறது,” என்று தினாளன் சொன்னார்.

ஈசா விவகாரத்தை கடுமையானதாக கருதி தற்போதுள்ள சட்டத்தை இயற்றுவது அல்லது திருத்துவதில் ஏதாவது செய்ய வேண்டும்.
எதிர்காலத்தில் இதுபோன்ற இணைய மிரட்டலைச் செய்பவர்களுக்கு அறிவுறுத்தும் அல்லது பயமுறுத்தும் கடுமையான சட்டங்கள் இருக்க வேண்டும் என்று தினாளன் தெளிவுபடுத்தினார்.

“ஈஷாவின் கதை முதல் முறை அல்ல, ஆனால் இதுபோன்ற பல வழக்குகள் உள்ளன, இணையபகடிவதைக்குஆளானவர்கள் சில சமயங்களில் எதிர்பாராத விதமாக தற்கொலை செய்து கொள்வது போன்ற சம்மவங்கள் நிகழாமல் தடுக்க விரைவில் ஏதாவது செய்ய வேண்டும்.

“இந்த நாட்டில் சமூகம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்காக போராடும் இளைஞர்களின் உயிர்கள் மீண்டும் இழக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் கருத்துக்கள், எதிர்பார்ப்புகளை சுதந்திரமாக தெரிவிக்க நினைக்கிறோம் என்று தினாளன் சொன்னார்.

கடந்த ஜூலை 5ஆம் தேதி, சைபர் மிரட்டலுக்கு ஆளாகியதாக நம்பப்படும் ஈஷாவின் மரணம் தொடர்பாக இரண்டு பேர் நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் ஒருவர் 100 வெள்ளி அபராதத்தோடு விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கில் காவல்துறை விசாரணை ஆவணங்களை முடிக்க, பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட மொத்தம் 11 சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்திருந்ததாக
செந்தூல் மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் அகமது சுகர்னோ முகமட் ஜஹாரி உறுதிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button