
இணையப் பகடிவதை தடுக்க குற்றவியல் சட்டம் 574இல் திருத்தம் மக்களவையில் சட்டமசோதா தாக்கல் செய்யப்படும் சட்டம் மற்றும் கழக சீர்த்திருத்த அமைச்சர் அஸாலினா தகவல்
கோலாலம்பூர்,ஜூலை 21-
இணையப் பகடிவதையை முறியடிக்கும் குற்றவியல் சட்டம் 574 ஐ திருத்தம் செய்வதற்கு
எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் மக்களவை கூட்டத்தில் சட்டத்திருத்தம் தாக்கல் செய்யப்படயடும் என்று பிரதமர் துறை சட்டம், கழக சீர்த்திருத்த அமைச்சர் டத்தோஶ்ரீ அஸாலினா ஒத்மான் கூறினார்.
இணையப் பகடிவதையைத் தடுக்கும் விதமாக தமது அமைச்சுடன் இலக்கவியல் அமைச்சு, தொடர்பு அமைச்சு, உள்துறை அமைச்சு ஆகிய அமைச்சுகளுடன் கலந்துரையாடல் நடத்தப்படும் என்று பெங்கெராங் நாடாளுமன்ற உறுப்பினருமான அஸாலினா தெரிவித்தார்
இந்த பகடிவதை சட்டம் தொடர்பில் 574இல் திருத்தம் கொண்டு வருவதற்கு முன் இது தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்படும். இந்த ஆய்வை ஒரு சிறப்பு பணிக்குழு மேற்கொள்ளும். இந்த சிறப்பு பணிக்குழுவில் நான்கு அமைச்சுகளை உட்படுத்திய அதிகாரிகள் இடம்பெறுவார்கள் அஸாலினா சொன்னார்.
இணையப் பகடிவதை தொடர்பான அனைத்துலக அளவிலான கலந்தாய்வு கூட்டங்கள், அதனை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து சட்ட அமைச்சு கூட்டங்களை நடத்தும் என்றும் அஸாலினா குறிப்பிட்டுள்ளார்.



