Malaysia

இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு கபடி போட்டி, பயிலரங்கம்

ஈப்போ, ஜுலை 26 பேராக் மாநிலத்திலுள்ள இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு கபடி போட்டி மற்றும், அதன் பயிலரங்கம் வரும் 10.8.2024 சனிக்கிழமை காலை 8.30 க்கு நடைபெறவுள்ளது. ஆறாவது ஆண்டாக நடத்தப்படும் இப்போட்டி ஆண் மற்றும் பெண் என்ற இரு பிரிவுகளில் நடத்தப்படவுள்ளதாக அதன் ஏற்பாட்டுக்குழு தலைவர் கோ.சண்முகவேலு கூறினார்.

பேராக் மாநில இளைஞர் மேம்பாட்டு இயக்கம் ஏற்று நடத்தும் இப்போட்டி இவ்வாண்டு ஈப்போ இந்திரா மூலியா ஸ்டேடியத்தில் நடத்தப்படவுள்ளது. வருகையாளர்கள் அனைவருக்கும் காலை சிற்றுன்டி மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படவுள்ளதாக அவ்வியக்கத்தின் தலைவரான அவர் குறிப்பிட்டார்.

இப்போட்டியிலும் பயிலரங்கத்திலும் கலந்துக்கொள்ள விண்ணப்பங்கள் செய்யலாம். மாணவர்கள் போக்குவரத்து குறித்த பேருந்து வசதிகளும் செய்து தரப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இந்திய இளைஞர்கள் தங்களின் பாரம்பரிய விளையாட்டை பற்றி அறிவதற்கு இது ஒரு அறிமுகமாக அமையும். அத்துடன், இப்போட்டியில் கலந்துக்கொண்டு தேசிய விளையாட்டாளராகவும், அனைத்துலக ரீதியில் மிளிர முடியும் என்று அவர் நம்பிக்கையுடன் கூறினார்.

இப்போட்டி மற்றும் பயிலரங்கள் பற்றிய கூடுதல் தகவலுக்கு கோ.சண்முகம் 019-5750121 அல்லது ம.சரவணன் 019-5727272 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button