Malaysia

ஈப்போ – லுமுட் நெடுஞ்சாலை கிளேடாங் மலைப்பகுதி ஸ்ரீ கார்த்திகேயன் ஆலயத்திற்கு 20 ஆயிரம் வெள்ளி மானியம்

தேசம் செய்திகள் சாரா

ஈப்போ, ஜூலை 4-
ஈப்போ – லுமுட் நெடுஞ்சாலை கிளேடாங் மலை மேட்டு பகுதியில் எழுந்தருளிக்கும் ஸ்ரீ கார்த்திகேயன் ஆலயத்திற்கு சரியான நேரத்தில் பத்துகாஜா நாடாளமன்ற உறுப்பினர் சிவகுமார் வரதராஜு நாயுடு உதவியுள்ளார்.

இவர் தனது மானியமாக 20 ஆயிரம் வெள்ளியை ஆலய கணக்கில் சேர்த்தது அவரின் பரிவை வெளிப்படுத்துவதாக ஆலய தலைவர் ரகுபதி இராமையா புகழ்.மாலை சூட்டினார்.

இயற்கை வளம் குழு குழு காற்று வீசும் பசுமை நிறைந்த பகுதியில் எழுந்தருளிக்கும் இவ்வாலய மின்சார் இணைப்பு மற்றும் ஆலயம் நடந்து செல்ல பயன் படும் படிக்கட்டுகளை பழுது பார்க்க நிதி தேவைப்பட அதன் தகவலை பத்துகாஜா நாடாளமன்ற உறுப்பினரின் கவனத்திற்க்கு கொண்டு சென்று அதற்கு அவர் பரிகாரம் கண்டது போற்றதலுக்குரியது என்றார் .

இந்தியர்கள் அதிகம் குடியிருக்கும் புந்தோங் தீகா கிராமம் எதிரே எழுந்தருளிக்கும் இவ்வாலயத்திற்கு சிவகுமார் 5 ஆயிரம் மற்றும் 10,000 வெள்ளி மானியம் வழங்கி ஆதரவு நல்கியதாக குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button