Malaysia

விஜய் எல்.எல்.பி. தி எட்வேகேட் திரைப்படத்திற்கு ஈப்போவில் அபார‌ வரவேற்பு

ஈப்போ,ஆக.11-
மலேசிய மண்ணின்‌ மைந்தர்களின் கை வண்ணத்தில் நிறைய‌ திரைப்படங்கள் வந்தாலும்‌ இன்னும் இந்தியா‌ நாட்டின்‌ திரைப்படங்களின் மவுசு நம்மை ஆட்டி படைக்கவே செய்கிறது.

ஆனால், அந்த திரைப்படங்களின் வரிசையில் மக்களின்‌ ஆள் மனதில் பதியக்கூடிய‌ திரைப்படமாக டி.எச்.ராகா அறிவிப்பாளர், உதயா நடிக்கும் விஜய் எல்.எல்.பி. தி எட்வோகேட் விளங்குகிறது.

உண்மையை சொல்ல வேண்டுமானால்‌, இயக்குனர்‌ மதியழகன் மிக அழகாக திரைப்டத்தை இயக்கியுள்ளார்.

இந்த‌ திரைப்டத்தை அனைவரும்‌ பார்க்க வேண்டும்‌ என்ற நோக்கத்தில் ஈப்போ மீடியா சப்போட்டர்ஸ் , ஈப்போ கிந்தா சமூகநல, விளையாட்டு மற்றும் பண்பாட்டு சங்கம்‌ ஈப்போ எல.எப்.எஸ். ஶ்ரீ கிந்தா திரையரங்கில் பெரிய‌ வரவேற்பு நிகழ்வினை‌ நடத்தினர்.

பி.எம்.கே. தப்பு மேளம்‌, தாசேக் குழுவினர்‌‌ வாசிக்க ராகா உதயா, டத்தோ இராமு அழகப்பன், ஈப்போ கிந்தா சமூகநல, விளையாட்டு, பண்பாட்டு‌ சங்கம் தலைவர், பி.யுவராஜன், ரோய், டத்தோஶ்ரீ டாக்டர் பூர்ண சந்திரன், இராஜேஸ்வரி, ஷார்வினேஷ் ஆகியோர் இந்நிகழ்வில்‌ சிறப்பு வருகை புரிந்தனர்.

மலேசிய திரைப்படங்களுக்கு நாம் எப்பொழுதும்‌ ஆதரவு அளிக்க வேண்டும் என ஈப்போ மீடியா சப்போட்டர்ஸ் ஐ.எம்.எஸ்.செல்வா கேட்டுக் கொண்டார்.

மேலும், எல்.எப்.எஸ். ஶ்ரீ கிந்தா மேலாளர்,டேனியல்,
பூங்கொடி ,சத்தீஸ் ஆகியொருக்கு அவர் நன்றியை கூறினார்.

ஈப்போ மக்கள்‌ இந்த‌ திரைப்படத்திற்கு பெரும்‌ஆதரவு‌ வழங்கினர்.

தனியார்‌ கல்லூரியில் உயர்கல்வியை‌ தொடர மாணவர்கள் கடனாளியாகின்றனர் என்பதை இந்த‌ படம் அழகாக காட்டுகிறது. அனைவரும்‌ பார்க்க வேண்டிய‌ அரிதான படம் விஜய்‌ எல்.எல்.பி. தி.எட்வோகேட். இத்திரைப்படத்திற்கு டத்தோ இராமு அழகப்பன்‌ பெரும் பங்காற்றியுள்ளார்‌எஎஎன்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button