
பிரதமரின் தம்புன் நாடாளுமன்ற தொகுதியில் ஆலய நிலப்பிரச்சனை தீர்வு காணப்பட்டால் சிறப்பு உண்மையற்ற காணொளியை பகிர்ந்தவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
ஈப்போ, ஆக.18-
அண்மையில் பிரதமரின் தம்புன் தொகுதியில் பண்டார் பாரு தம்புனில் கடந்த 11 வருடங்களாக அமைந்துள்ள ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய வளாகத்தில் யாரும் நுழையக்கூடாது என்ற அறிவிப்பு பலகையை கிந்தா மாவட்ட நிலவள இலாகா ஆலய முன்வாசலில் பொருத்தியுள்ளனர். ஆலயத்தை உடைப்பதாக எந்தவொரு நோட்டீசும் வழங்கப்படவில்லை என்று உலுகிந்தா சட்டமன்ற உறுப்பினர் முகமட் அராபாட் வரிசை ஆலயத்துற்கு நேரடியாக வந்துபோது இதனை தெரிவித்தார்.
இவ்விவகாரம் குறித்து முழு தகவலும் அறியாத பொறுப்பற்ற நபர் இந்த ஆலயம் உடைப்பட போவதாகவும், அதற்கு சட்டமன்ற உறுப்பினர்தான் காரணம் என்று உண்மையற்ற தகவலை காணொளி வாயிலாக பகிர்ந்து வந்துள்ளதை அவர் குறிப்பிட்டார்.

உண்மையற்ற தகவலை காணொளி வாயிலாக பகிர்ந்த ஆடவர் மீது போலீஸ் புகார் செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அவரை நீதிமன்றத்தில் சந்திக்க நான் தயாராக உள்ளேன் என்று அவர் சவால் விடுத்தார்.
இந்த உலுகிந்தா சட்டமன்ற தொகுதியில் நான் இருக்கும்வரை எந்தவொரு ஆலயமும் உடைபடாது; எந்த ஆலயத்தையும் யாராலும் அழிக்க முடியாது. நான் முதலில் நின்று அப்பிரச்சினைக்கு தீர்வு காண்பேன் என்று அவர் கூறினார்.
இவ்விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கலந்தோலேசித்து தீர்வு காண வழிமுறைகள் கண்டறியப்பட்டது. நமது கடமையை நாம் முறைப்படி இந்நிலம் ஆலயத்திற்கு கிடைக்க கோரிக்கைமனு வைக்கப்படும். அத்துடன் இங்குள்ள சுமார் 400 இந்திய குடும்பத்தாரின் ஆதரவு கையொப்பங்கள் அரசாங்க தரப்பினரிடம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த ஆலயத்தின் திருவிழா அடுத்த வாரம் நடைபெறவுள்ளதால் இந்த ஆலய நில விவகாரம் விரைவில் தீர்வு காணும் என்று நம்பிக்கையுடன் கூறினார் ஆலய செயலாளர் மகேந்திரன் ராஜகோபால். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முற்படும் அனைத்து தரப்பினருக்கும் அவர் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.



