IndiaInternationalMalaysia

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் அதிகாரப்பூர்வ இந்தியப் பயணத்தில் ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்,ஆக.20-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அதிகாரப்பூர்வ இந்திய பயணத்தில் ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் இடம்பெற்றுள்ளார்

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆகஸ்ட் 19 தேதி தொடங்கி 21 வரை இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்கிறார். இதற்காக சிறப்பு விமானம் பிரதமர் மற்றும் இதர அமைச்சர்கள் வருகையாளர்களை சுமந்து கொண்டு நேற்று மாலை புறப்பட்டது.

இந்த அதிகாரப்பூர்வ பயணத்தில் பிரதமர் அன்வாரின் அழைப்பின் பேரில் ம.இ.கா தேசிய தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ம.இ.கா சார்பில் பிரதமருடன் ஒரே விமானத்தில் சென்றுள்ளார்.

இந்த வருகையின் போது பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்படவிருப்பதால் இந்திய சமுதாய தலைவர் என்ற முறையில் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அவர்களை பிரதமர் அழைத்துள்ளதாக தெரிகிறது.

இந்த பயணத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அன்வார் சந்திக்கிறார். இந்த வருகையின் போது மருத்துவம், மனிதவளம், பல்லூடகம், பொது திட்டங்கள் என்று 7 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளன.

இந்த இந்திய பயணத்தில் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன், வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ உத்தாமா முகமட் ஹசான், முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ உத்தாமா துங்கு ஜஃப்ருல், சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங், டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மற்றும் மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் ஆகியோரும்
இடம்பெற்றுள்ளனர்.

கடந்த 2022 நவம்பரில் பதவியேற்ற பிறகு பிரதமர் அன்வார் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button