
Malaysia
ஃபிரான்சாய்ஸ் ஆலோசகர் வாரியம் அதன் உறுப்பினராக டத்தோ ஏபி சிவம் நியமனம் டத்தோஸ்ரீ ஆர்.ரமணன் தகவல்
கோலாலம்பூர்,நவ.28-
ஃபிரான்சாய்ஸ் ஆலோசகர் வாரியத்தின் உறுப்பினராக டத்தோ ஏபி சிவம் நியமிக்கப்பட்டுள்ளதாக தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ஆர்.ரமணன் கூறினார்.
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு அமைச்சின் கீழ் செயல்பட்டு வரும் ஃபிரான்சாய்ஸ் ஆலோசகர் வாரியத்தின் கூட்டம் நடைபெற்ற நிலையில்
ஃபிரான்சாய்ஸ் ஆலோசகர் வாரியத்தின் உறுப்பினராக டத்தோ ஏ.பி.சிவம் நியமனம் செய்யப்பட்டதற்கான நியமனக் கடிதத்தை டத்தோ ஏ.பி.சிவம் அவர்களிடம் டத்தோஸ்ரீ ரமணன் வழங்கினார்.
இந்த வாரிய கூட்டத்தில் முக்கிய பல விவகாரங்கள் விவாதிக்கப்பட்டது. இதில் வாரியத்தின் 15 உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கப்பட்டது. இதில் புத்ரி குழுமத்தின் தலைவர் டத்தோ ஏ.பி சிவம் அவர்களுக்கு
நியமனக் கடிதம் வழங்கப்பட்டது என்பன குறிப்பிடத்தக்கது.



