Malaysia

ஊடகவியலாளர்கள், அமலாக்க துறையை சார்ந்தவர்களுக்கான புரட்சி இயக்கத்தின் தமிழன் விருதளிப்பு விழா

கோலாலம்பூர், ஆக.21-
ஊடகம் மற்றும் அமலாக்க துறைகளில் முத்திரை பதித்தவர்களை அங்கீகரிக்கும் நோக்கத்தில் புரட்சி இயக்கத்தின் தமிழன் விருது விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் ஐந்து வருடங்களுக்குப் பிறகு இவ்வாண்டு தமிழன் விருதளிப்பு விழா மிகப்பெரிய அளவில் நடைபெறவுள்ளது. இந்த விருது விழா
பெட்டாலிங் ஜெயா சிவிக் செண்டரில் வரும் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளதாக அதன் ஏற்பாட்டு குழு துணைத் தலைவரும் புரட்சி இயக்கத்தின் தலைவருமான உமாகாந்தன் கூறினார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழன் விருதுகள் 35 பேருக்கு வழங்கப்பட்டது. இதில்
விளையாட்டு, கலை, விவசாயம், நீதித்துறை, ராணுவம், சிறைச்சாலை, தகவல் தொழில்நுட்பம் உட்பட மொத்தம் 15 பிரிவுகளில் 35 தமிழன் விருதுகள் வழங்கப்பட்டது.

இந்த முறை 30 பேருக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளது. இதில் 15 விருதுகள் பதிவு பெற்ற ஊடகவியலாளர்களுக்கும் மேலும்15 விருதுகள் காவல்துறை, நீதித்துறை, இராணுவம், கடற்படை, ஊழல் தடுப்பு ஆணையம் உள்ளிட்ட துறையில் முத்திரை பதித்தவர்களுக்கு வழங்கப்படவிருப்பதாக உமா காந்தன் தெரிவித்தார்.

கடந்த 2018இல் ஓரு தமிழன் என்ற இயக்கத்தின் மூலம் நடத்தப்பட்ட இவ்விருதளிப்பு விழா
இம்முறை புரட்சி இயக்கம் மற்றும் ஐசிட் எனப்படும் இயக்கத்தின் மூலம் நடத்தப்படுகிறது என்று உமாகாந்தன் சொன்னார்.

ஊடகவியலாளர்களை அங்கீகரிக்கும் விதமாக 15 விருதுகள் வழங்கப்படவுள்ளது. இதில் பல சாதனைகள் மற்றும் தனித்துவம் கொண்டிருக்கும் ஊடகவியலாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படவிருக்கிறது. இந்த விருது விழா தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ், வழக்கறிஞர் தினேஷ், ஐசெட் தலைவர் திவாஸ் சண்முகம், ராகா மாறன் உள்ளிட்ட பலரும். கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button