
IndiaInternationalMalaysia
இந்தியக் குடியரசுத் தலைவருடனான சந்திப்பு இரு நாடுகளுக்கு இடையில் நல்ல ஒத்துழைப்பை எட்டியது: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் பெருமிதம்
புதுடில்லி, ஆக 21-
இந்தியக் குடியரசுத் தலைவருடனான சந்திப்பு இரு நாடுகளுக்கு இடையில் நல்ல ஒத்துழைப்பை எட்டியது என்று
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை தமது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய பயணத்தின் ஓர் அங்கமாக இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன்.
இந்த சந்திப்பு புதுடில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது.
.
எங்கள் கலந்துரையாடல் இருதரப்பு உறவுகள், மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான நல்ல ஒத்துழைப்பைத் தொட்டது.
மேலும் பரஸ்பர ஆர்வமுள்ள பல விஷயங்களில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளப்பட்டது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
பெர்னாமா



