
IndiaInternationalMalaysia
மஸ்ஜிட் இந்தியாவில் குழியில் விழுந்த இந்திய சுற்றுப்பயணியை காணவில்லை
கோலாலம்பூர்,ஆக.23-
மஸ்ஜிட் இந்தியாவில் திடிரென்று ஏற்பட்ட 10 மீட்டர் ஆழமுள்ள குழியில் புதையுண்ட இந்திய சுற்றுப்பயணி ஒருவரை தேடும் பணி திவீரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மஸ்ஜிட் இந்தியாவில் வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்த அவர் மழை காரணமாக திடீரென்று ஏற்பட்ட 10 மீட்டர் ஆழம் கொண்ட குழியில் அந்த இந்திய சுற்றுப்பயணி விழுந்தார்.
அந்த குழியில் விழுந்த அவர் நிலத்தடியில் புதையுண்டதாக தெரிகிறது. மேலும் நிலத்தடியில் ஏற்பட்டுள்ள நீர் உற்றில் அவர் அருகில் உள்ள ஆற்றுப்பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இதனால் பல இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.



