
பாதுகாப்பு அம்சங்களை முன்வைத்து புதையுண்ட விஜயலட்சுமியை மீட்கும் பணி நிறுத்தப்படுகிறது அமைச்சர் ஜலேஹா அறிவிப்பு
கோலாலம்பூர்,ஆக.1-
மீட்புக் குழுவின் உடல் நலன், அவர்களின் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து மஸ்ஜித் இந்தியாவில் புதையுண்ட விஜயலட்சுமியை தேடி மீட்கும் பணி உடனடியாக நிறுத்தப்படுவதாக
கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டாக்டர் ஜலேஹா முஸ்தபா கூறினார்.
இந்த முடிவு குறித்து விஜயலட்சுமியின் குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது. இம்முடிவை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். மீட்புக்குழுவினரின் பாதுகாப்பை முன்வைத்து இம்முடிவு எடுக்கப்பட்டதால் இம்முடிவை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் வேண்டும். இது குறித்து யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று அமைச்சர் டாக்டர் ஜலேஹா முஸ்தபா கேட்டுக் கொண்டார்.
கடந்த ஆகஸ்டு 23 வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு நடைபாதை சரிந்து விழுந்ததில் இந்தியா ஆந்திர மாநிலம், குப்பம் கிராமத்தை சேர்ந்த விஜயலட்சுமி புதையுண்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அவரை தேடும் பணி ஒரு வாரமாக நடைபெற்று வந்தும் எந்த பயனும் இல்லை.
தேடுதல், மீட்புக் குழு பல்வேறு முயற்சிகளின் வாயிலாக அவரை தேடியும் பயனில்லை என்று டாக்டர் ஜலேஹா முஸ்தபா சொன்னார்.
இந்த சூழலில் பாதுகாப்பு காலணங்களுக்காக விஜயலட்சுமியை தேடும் பணி நிறுத்தப்படுவதாகவும்
அரசாங்கம், போலிஸ், தீயணைப்பு உட்பட மீட்புக் குழுவினருடான பேச்சுவார்த்தைக்கு பின் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் டாக்டர் ஜலேஹா முஸ்தபா அறிவித்துள்ளார்.



