
ஜொகூர் மக்கோத்தா இடைத்தேர்தல்… தேசிய முன்னணிக்கு ஆதரவாக மைபிபிபி களமிறங்க வேண்டும் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி வேண்டுகோள்
கோலாலம்பூர், செப் 1-
ஜொகூர் மாநில மக்கோத்தா சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தேசிய முன்னணிக்கு ஆதரவாக பைபிபிபி கட்சி களம் இறங்க வேண்டும் என்று தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி கேட்டுக் கொண்டார்.
கிளாந்தான் நெங்கிரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தேசிய முன்னணி அமோக வெற்றி பெற்றுள்ளது.
ஜொகூர் மக்கோத்தா சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் தேசிய முன்னணி அமோக வெற்றி பெற மைபிபிபி கட்சி களம் இறங்க வேண்டும் என்றார்.
மைபிபிபி கட்சிக்கு எப்போதும் பக்கம் பலமாக நாங்கள் இருக்கிறோம் என்று அவர் சொன்னார்.
மைபிபிபி கட்சி தொடர்ந்து வெற்றி நடை போட மனதார வாழ்த்துகிறேன் என்றார் அவர்.
புத்ரா வாணிப மையத்தில் இன்று மைபிபிபி கட்சியின் 71 ஆவது தேசிய பேராளர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



