
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுங்கை சிப்புட் சத்ய சாய்பாபா மைய மாணவர்களின் ஓரங்க நாடக அரங்கேற்றம்
சுங்கை சிப்புட்,செப்.13-
சுங்கை சிப்புட் வாழ் மாணவர்களை நல்வழிபடுத்தவும் ஆன்மீகச் சிந்தனையை விதைக்கவும் பல நடவடிக்கைகளை முன்னெடுத்து சங்கநதி சத்திய சாய்பாபா மையம் சிறப்பாக நடத்தி வருகிறது.
இந்து சமயத்தைச் சார்ந்த நம் மாணவர்கள் ஆலயத்திற்குச் செல்வதோடு நின்று விடக் கூடாது. நம் இந்து சமயத்தின் தர்மங்களையும் ஆன்மீக அறிவினையும் நன்கு அறிந்திருக்க வேண்டும் என்ற உன்னத குறிக்கோளுடன் சங்கநதி சத்ய சாய்பாபா மையம் மாணவர்களை உருவாக்கி வருகின்றனர்.

அவ்வகையில் கெமிரி தோட்டத்தில் அமைந்திருக்கும் ஶ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில் விமரிசையாகக் கொண்டாடப்பட்ட
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஞானப்பழம் எனும் எனும் ஓரங்க நாடகத்தை மிகச்சிறப்பாக அரங்கேற்றினர் நம் சங்கநதியை சத்திய சாய்பாபா மையத்தைச் சார்ந்த மாணவ மணிகள்.
விநாயகப் பெருமான், முருகப் பெருமான், சிவன் சக்தியென வேடம் தரித்து மாணவர்கள் தத்தம் அபார திறமையைக் காட்டி நடித்தது. மிகவும் போற்றுதற்குரியது.
இந்த படைப்பில் சத்திய சாய்பாபா மையத்தில் ஆன்மீகம் மற்றும் அறநெறி வகுப்புகளில் பயிலும் ஈவுட். தமிழ்ப்பள்ளி, மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளி, சங்காட் சாலாக் தமிழ்ப்பள்ளி மற்றும் மெத்திடிஸ்ட் தேசியப்பள்ளி மாணவர்களும் பங்கேற்றனர்.
இம்மாணவர்களுக்குச் சத்ய சாய்பாபா மைமயத்தின் ஒருங்கிணைப்பாளர், திருமதி.கமலம் பனிகர் அவர்கள் பயிற்சி வழங்கினார்
இவ்விழாவிற்குப் பாலச்சந்திரன் -சாராதா இணையரும் இரவிசந்திரன் -ஷீலா சந்திரன் இணையரும் – உபயத்தை ஏற்றனர்.
வருகையளித்த பக்தர்களுக்கு நம் பாரம்பரிய பண்பாட்டோடு வாழையிலை உணவு பரிமாறப்பட்டது குறிப்பிடப்பட்டது.



