
பத்தாங் பெர்ஜூந்தை, சுங்கை டாரா கல்லுக்குழி ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய மகாகும்பாபிஷேகம் மிகவும் விமர்ச்சையாக நடைபெற்றது ம.இ.கா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கலந்து கொண்டார்
பத்தாங் பெர்ஜூந்தை,செப்.14-
சுமார் 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த
பத்தாங் பெர்ஜூந்தை ஸ்டார்த்மோர் கல்லுக்குழி
ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் மகாகும்பாபிஷேகம் மிகவும் விமர்ச்சையாக நடைபெற்றது.
கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி காலை 11 மணிதொடங்கி 12.30 மணிக்கு இடையில் மகா கும்பாபிஷேகம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தில் ம.இ.கா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் மற்றும் அரசியல் தலைவர்கள், சமயத்தலைவர்கள் முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றதாக ஆலயத் தலைவர் திரு.ராமகணேசன் கூறினார்.
இந்த ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் திருப்பணி வேலைகள் கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. நிதி பற்றாக்குறை காரணமாக திருப்பணி பூர்த்தி செய்யப்படுமா என்ற நிலையில் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் வெற்றிகரமாக திருப்பணியை பூர்த்தி செய்து தற்போது மகா கும்பாபிஷேகத்தை மிகவும் சிறப்பாக நடத்தி முடித்து விட்டார் ராமகணேசன்.
இந்த பத்தாங் பெர்ஜூந்தை ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம் 130 ஆண்டுகள் வரலாற்றை கொண்ட ஆலயமாகும். அந்த காலத்தில் தோட்ட மக்களால் நிறுவப்பட்ட இந்த ஆலயம் காலங்காலமாக பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது ஆலயம் மகா கும்பாபிஷேகம் கண்டுள்ளது.
இந்த ஆலயத்தின் மகா கும்பாபிஷேகத்தில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். காலை 11 மணிக்கு கும்பங்களுக்கு கலச நீர் ஊற்றப்பட்டது. அதன்பிறகு பக்தர்கள் மீது கலசநீர் தெளிக்கப்பட்டது.
இந்த ஆலயம் கடந்த 8 ஆண்டுகளாக திருப்பணி கண்டு வருகிறது. தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ஒரு லட்சம் வெள்ளி வழங்கியிருந்தார். டத்தோஸ்ரீ எம்.சரவணன் ஒரு லட்சம் வெள்ளி வழங்கினார். தான்ஸ்ரீ சுப்ரமணியம் ஒரு லட்சம் வெள்ளியும் வழங்கினார். Gula Perak மற்றும் இதர தலைவர்கள் வழங்கிய பணத்தை கொண்டு 20 லட்சம் வெள்ளி செலவில் கோவில் திருப்பணி செய்யப்பட்டுள்ளதாக ராமகணேசன் கூறினார்.
இந்த கோவில் திருப்பணியை திருப்பணிக் குழுச் செயலாளர் தென்னரசு, நிர்வாக குழுவினர் அனைவரும் திருப்பணி சிறப்பாக நடைபெற பாடுபட்டனர். ஆலய திருப்பணிக்கு பொதுமக்களும் நிதியுதவி வழங்கியுள்ளதாக ராமகணேசன் தெரிவித்தார்
பத்தாங் பெர்ஜூந்தை சுற்று வட்டாரத்தை சேர்ந்த தோட்டப் பாட்டாளிகளுக்கு முக்கிய ஆலயமாக கருதப்படும் இந்த கோவில் ஒரு தாய்க் கோவிலாக விளங்கி வருகிறது என்பதால் அனைவரும் தொடர்ந்து நிதி வழங்கி ஆதரவு தரும்படி ராமகணேசன் கேட்டுக் கொண்டார்.



