Malaysia

மஸ்ஜித் இந்தியாவில் நில அமிழ்வு சம்பவம் கடவுள் கொடுத்த தண்டனையா? அமைச்சர் ஜலேஹா முஸ்தபா கடும் கண்டனம்

கோலாலம்பூர்: செப் 14-
தலைநகர் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் ஏற்பட்ட நில அமிழ்வு சம்பவம் கடவுள் கொடுத்த தண்டனை என்று கருத்துக்குப் பிகூட்டரசுப் பிரதேச அமைச்சர் டாக்டர் ஜலேஹா முஸ்தாபா கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

குறுகிய மனப்பான்மையுடன் நடந்துகொள்ள வேண்டாம்
என்றும் சமயக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு வாதங்களை முன்வைக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

மற்றவர்களைக் குறைகூறுவதன் மூலம் எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது என்றார் அவர்.

பாஸ் கட்சியினருக்கோ அல்லது பாஸ் கட்சி ஆட்சி செய்யும் மாநிலத்திலோ அசம்பாவிதம் ஏற்பட்டால் அது கடவுள் தரும் சோதனையாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

அதுவே மற்ற மாநிலங்களில் நடந்தால் அது கடவுள் கொடுத்த தண்டனையாகக் கருதப்படுகிறது.

இது எந்த விதத்தில் நியாயம் என்று அவர் கேள்வியை எழுப்பினார்.

நில அமிழ்வு சம்பவத்தைக் கடவுள் கொடுத்த தண்டனை என்று பாஸ் கட்சியைச் சேர்ந்த மாச்சாங் இளைஞர் பிரிவு உறுப்பினர் முஹம்மத் ஷரிஃப் அஸாரி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button