Malaysia

ஜொகூர் மக்கோத்தா சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்! தேசிய முன்னணி – பெரிக்கத்தான் நேஷனல் இடையே நேரடி போட்டி

குளுவாங், செப் 14-
ஜொகூர் மக்கோத்தா சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தேசிய முன்னணி மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

சனிக்கிழமை காலையில் வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றது.
தேசிய முன்னணி சார்பில் குளுவாங் அம்னோ
இளைஞர் பிரிவுத் தலைவர் சைட் ஹூசேன் சைட் அப்துல்லா (வயது 40) 3,000 பேர் புடைசூழ வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

அதே சமயம்
ஜோகூர் எஃப்.ஏ. கால்பந்து குழுவின் முன்னாள் விளையாட்டாளர் முகமது
ஹைஸாம் ஜாபரை (வயது 61) பெரிக்கத்தான் நேஷனல் களமிறக்கியுள்ளது.

இந்த மக்கோத்தா தொகுதி குளுவாங் நாடாளுமன்றத் தொகுதியில்
அமைந்துள்ள இரு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாக விளங்குகிறது

இத்தொகுதியில் மொத்தம் 66,318 பதிவு பெற்ற வாக்காளர்கள் உள்ளனர். மக்கோத்தா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஷரிபா அஜிசா சைட்
ஜைன் (வயது 63) கடந்த ஆகஸ்டு மாதம் 2ஆம் தேதி காலமானதைத்
தொடர்ந்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button