
தேசிய முன்னணியுடனான தங்களின் பயணம் தொடரும் 16ஆவது பொதுத் தேர்தலுக்கு தயாராகும் நடவடிக்கைகளை மக்கள் சக்தி கட்சி தொடரும் டத்தோஸ்ரீ தனேந்திரன் சூளுரை
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்
போர்ட்டிக்சன், மே 26-
வெற்றியோ தோல்வியோ தேசிய முன்னணியுடனான தங்களின் பயணம் தொடரும் என்று மக்கள் சக்தி கட்சியன் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் கூறியுள்ளார்.

இந்த ஆதரவு பயணம் வரும் காலங்களிலும் தொடரும் அதேவேளையில் அடுத்த பொதுத் தேர்தலுக்கு தயாராகும் நடவடிக்கைகளை மலேசிய மக்கள் சக்தி கட்சி தொடரும் என்று டத்தோஸ்ரீ ஆர்.எஸ் தனேந்திரன் தெரிவித்தார்.
மலேசிய மக்கள் சக்தி கட்சி தொடங்கப்பட்டது முதல் தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்கி வருகிறது. நாட்டின் 16ஆவது பொதுத் தேர்தலுக்கு கட்சி உறுப்பினர்களை தயார்ப்படுத்த வேண்டும். கட்சியை வலுப்படுத்த வேண்டும்.
இதன் அடிப்படையில் தான் ரிட்ரேட் எனப்படும் உறுப்பினர்களுக்கான சிறப்பு பட்டறைகளை நடத்தி வருகிறோம். குறிப்பாக அரசியல் ஒரு சாக்கடை என்பதை மாற்றி இளைஞர்களுக்கு அரசியல் குறித்து நல்ல சிந்தனையை கொண்டு வர வேண்டும் என்று டத்தோஸ்ரீ தனேந்திரன் சொன்னார்.
இது தான் இன்றைய நிகழ்வின் முக்கிய அங்கமாக உள்ளது. இன்று கிட்டத்தட்ட 250 பேர் இதில் கலந்துக் கொண்டனர். இது 2500 ஆகவும் 2 லட்சமாகவுன் மாறும். ஆகையால் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுப்பதோடு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று டத்தோஸ்ரீ தனேந்திரன் கூறினார்.



