Uncategorized

இந்திய சிறு தொழில் வணிகர்களுக்கு I-BAP திட்டத்தின் கீழ் 60 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு டத்தோஸ்ரீ ஆர்.ரமணன் அறிவிப்பு

 

கிள்ளான் செப் 27-
நாட்டில் உள்ள இந்திய சிறு தொழில் வணிகர்களுக்கு உதவும் வகையில் ஐ- பேப் எனும் புதிய திட்டத்தின் வாயிலாக அறுபது லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டிருப்பதாக
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

அமைச்சின் கீழ் இயங்கும் எஸ்எம்இ கோர்ப் வாயிலாக கிட்டத்தட்ட 60 லட்சம் வெள்ளி ஒதுக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் 1 லட்சம் வெள்ளி வரை வர்த்தக உதவித் தொகை வழங்கப்படும்.
இந்நிதியை கொண்டு தங்களின் வர்த்தகத்தை வணிகர்கள் மேம்படுத்திக் கொள்ளலாம் என்று டத்தோ ரமணன் தெரிவித்தார்..

 

தங்கள் சிறு தொழிலுக்கு தேவைப்படும் இயந்திரங்கள் உட்பட பொருட்களை வாங்குவதற்கு இந்த நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்நிதிக்கு விண்ணப்பம் செய்யும் இந்திய நிறுவனங்கள் 60 விழுக்காடு பங்குகளை கொண்டிருக்க வேண்டும்.

ஆண்டுக்கு 3 லட்சம் வெள்ளி வரை வியாபாரத்தை மேற்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனம் குறைந்தது 12 மாதங்களுக்கு செயல்பட்டிருக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.

வணிக பதிவு சான்றிதழ், வர்த்தக இடங்களுக்கான பதிவு, நிறுவன கணக்கறிக்கை, வங்கி கணக்கறிக்கை உட்பட 5 ஆவணங்களை மட்டும் கொண்டு இதற்கு விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்த அடுத்த 14 நாட்களில் அதற்கான முடிவு தெரிந்து விடும் என்று அவர் சொன்னார்.

இதனிடையே
தெக்குன் ஸ்பூமி கோஸ் பிக் திட்டத்தின் கீழ் 3 கோடி வெள்ளி மற்றும் அமானா இக்தியார் பெண் திட்டத்தின் வாயிலாக 5 கோடி மில்லியன், பேங்க் ரக்யாத் பிரிவ்-ஐ திட்டத்தின் வாயிலாக 5 கோடி வெள்ளி இதற்கு முன்னர் ஒதுக்கப்பட்டது.

இம்மூன்று திட்டங்களும் இந்திய வணிகர்களுக்கு பெரும் பயனாக அமைந்த வேளையில் இப்போது ஐ – பேப் திட்டமும் பெரும் உதவியாக இருக்கும் என்று டத்தோஸ்ரீ ஆர்.ரமணன் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button