Malaysia

வழக்கறிஞர் ம.மதியழகனின் எண்ணங்கள் வண்ணங்கள் நூல் அறிமுகம்

ஈப்போ, செப்.26-
ஈப்போ சுங்கை பாரி வழியில் அமைந்துள்ள அருள்மிகு மகா மாரியம்மன் ஆலய திருமண மண்டபத்தில்
எதிர்வரும் 28.09 2024 ஆம் நாள் சனிக்கிழமை மாலை மணி 4.30 அளவில் வழக்கறிஞர் ம.மதியழகனின் வண்ணங்கள் எண்ணங்கள் நூல் அறிமுகம் காணவுள்ளது.

இந்நூல் அறிமுகவிழா கம்பார் கனிமொழி தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி
நூல் வெளியீடு மற்றும் சிறப்புரை செய்கிறார்

இந்நிகழ்வின் முதல் அங்கமாக தமிழ்ப்பள்ளி மாணவர்களின் புத்தாக்கப் படைப்பு நடைபெறும். அதனைத் தொடர்ந்து தேநீர் விருந்துடன், நிகழ்வு தொடங்கப்படும் என்று ஏற்பாட்டுக்குழு தலைவரான வழக்கறிஞர் ம. மதியழகன் கூறினார்.

இந்நிகழ்வில் பேராக் மாநில 134 தமிழ்ப்பள்ளிகளுக்கும் இந்நூல் இலவசமாக வழங்கப்படும். அத்துடன், இந்நிகழ்வின் வருகையாளர்கள் அனைவரும் இந்நூலை இலசமாக துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமியிடம் பெற்றுக் கொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த நூல் அரங்கேற்ற நிகழ்வு, பேராக் தமிழ் எழுத்தாளர் சங்கம், முத்தமிழ் பாவலர் மன்றம், பேராக் மாநில ஒருங்கிணைந்த இயக்கங்கள், பேராக் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றத்தின் ஆதரவோடு நடத்தப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

இவ்விழாவில் கலந்து இலக்கிய இன்பம் சுவைத்திட வழக்கறிஞர் ம. மதியழகன் அன்போடு அழைக்கின்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button