Malaysia

பைபிபிபி கட்டடம் கட்சிக்கு சொந்தமானது இது தனிநபர் சொத்து அல்ல டத்தோ டாக்டர் லோகபாலா அறிவிப்பு

கோலாலம்பூர், அக் 4-
கம்போங் அத்தாப்பில் அமைந்துள்ள மைபிபிபி கட்சியின் தலைமையக கட்டடம் கட்சிக்கு சொந்தமானது.

இது யாருடைய தனிப்பட்ட கட்டடம் அல்ல. இதை தனிநபர்கள் சொந்தம் கொண்டாட வேண்டாம் என்று மைபிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்தார்.

இந்த கட்டத்திற்கு வருபவர்கள் இது யாருடைய கட்டடம், இது தனி நபருக்கு சொந்தமா என்று விசாரித்து வருகின்றனர்.

மைபிபிபி கட்டடம் கட்சிக்கு சொந்தமானது. இது மைபிபிபி கட்சி உறுப்பினர்களின் சொத்தாக விளங்குகிறது என்று இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button