Malaysia

தீவிர சிகிச்சை, அவசர பிரிவு செவிலியர்கள் மருத்துவ உதவியாளர்களுக்கு கருத்தரங்கு

ஈப்போ, அக்.5:- மூன்றாவது மாநாட்டை பேராக் மாநிலத்தில் தீவிர சிகிச்சை மற்றும் அவசர பிரிவில் பணிபுரியும் செவிலியர்கள் ,மருத்துவ உதவியாளர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இம்மாநட்டில் 560 மருத்துவ உதவியாளர்கள் கலந்துக்கொண்டனர் என்று இம்மாநாட்டை தொடக்கி வைத்தபோது பேராக் மாநில சுகாதாரம், மனிதவளம், ஒற்றுமை, இந்திய சமூகநலத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் கூறினார்.

கடந்த இரு மாநாடுகள் வேறு மாநிலங்களில் நடந்தேறி விட்டன. இவ்வாண்டு பேராக் மாநிலத்தில் நடைபெறுவதில் மகிழ்ச்சிகரமாக உள்ளதோடு, இந்த மாநாட்டின் நிதியுதவி மற்றும் இதர செலவீனங்களையும் மாநில அரசு ஏற்றுக்கொண்டதாக அவர குறிப்பிட்டார்.

 

இக்கருத்தரங்கில் தீவிர சிகிச்சை மையம் மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களுக்கு உதவும் முக்கிய உதவியாளர்கள் இவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அங்குள்ள அறுவை சிகிச்சைக்கான உபகரணங்களை எவ்வாறு பயன்படுத்துவது, தற்போதைய சுகாதார விதிமுறைகளை பின்பற்றி கையாள்வது குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நிபுணத்துவ மருத்துவர்களுக்கு பக்கபலமாக இருக்கும் இவர்களுக்கு 3 நாட்களுக்கு இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், பேராக் மாநிலத்தை பிரதிநிதித்து 109 மருத்துவ உதவியாளர்கள் கலந்துக்கொண்டனர். மேலும் மற்றவர்கள் சபா சரவாக் உட்பட பிர மாநிலத்தை பிரதிநிதித்து இக்கருத்தரங்கில் கலந்துக்கொண்டதாக அவர் கூறினார்.

இந்த மாநாடு அரசாங்கம் மற்றும் தனியார் துறை மருத்துவமனை சுகாதார உதவியாளர்கள் கலந்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனியார் துறை மருத்துவமனைகளுக்கும் அரசாங்கம் பாகுபாடுன்றி உதவி வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.

இம்மாநாட்டில் 47 மருத்துவ கடைகளும் உபகரண கண்காட்சி்யும் இடம் பெற்றன. இக்கண்காட்சியில் சுவாசம் மற்றும் அதற்கான உபகரணங்கள், அறுவை சிகிச்சைகாக பயன்படுத்தப்படும் கருவிகள் மற்றும் சுகாதார துறைக்கு இவர்ள் சம்பந்தப்பட்ட பொருட்கள் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை அவர் நேரில் சென்று பார்வையிட்டார்.

இம்மாநாட்டின் வாயிலாக புதிய யுக்திகள், முன்னறிவு மற்றும் அதனை எவ்வாறு தங்களின் பணிகளில் பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவ பணியாளர்களுக்கு தெளிவான விளக்கமளிக்கப்பட்டது. இவை அவர்களின் உன்னத பணிக்கு பெரும் துணை நிற்கும் என்று பேராக் மாநில தீவிர சிகிச்சை, அவசர பிரிவு செவிலியர்கள் மருத்துவ உதவியாளர்களின் அமைப்பின் தலைவர் அண்ரூவ் பிரகாஷ் அந்தோணிசாமி தம் கருத்தை பதிவு செய்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button