Malaysia

தஞ்சோங் ரம்புத்தான சமயபுர மகா மாரியம்மன் ஆலய சித்திரைத் தேர்திருவிழா

தம்பூன், ஏப்.25-
பேரா மாநிலத்தில் மிகவும பிரசித்திப் பெற்ற ஆலயங்களில் ஒன்றாக இருக்கும் தஞ்சோங் ரம்புத்தான் சமயபுர மகா மாரியம்மன் ஆலயத்தின் சித்திரைத் தேர்திருவிழா விமர்சியாக கொண்டாடப்பட்டது.

இத்திருவிழாவைக் காண பேரா மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கான பக்தர்கள் திரண்டனர்.
இவ்விழாவை முன்னிட்டு ஒன்பது நாட்கள் சிறப்பு பூஜையைத் தொடர்ந்து மறுநாள் இரத ஊர்வலம் சிறப்புடன் நடந்தேறியது.

இவ்விழாவிற்கு தம்புன் நாடாளுமன்றத் தொகுதிற்கான சிறப்பு அதிகாரி டத்தோ ஆர். சுரேஸ்குமார் சிறப்பு வருகை புரிந்தார்.
தம்புன் நாடாளுமன்றத் தொகுதியில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை தேர்வு செய்ய இந்தியர்கள் பெரும் பங்காற்றியதற்கு நன்றி தெரிவித்தார்

அதன் நன்றி கடனாக இந்த தொகுதியில் உள்ள இந்திய சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்சனைகளை கண்டறிந்து உதவிகள் வழங்கி வருவதாக குறிப்பிட்டார்.

இந்த வட்டாரத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள் , ஆலயங்களுக்கு தேவையான உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button