Short News

உயர் கல்விக் கூடங்களில் கல்வியை தொடங்கவிருக்கும் 200 மாணவர்களுக்கு துணைப் பிரதமர் அலுவலகத்தின் சார்பில் உதவி டத்தோஶ்ரீ ஜாஹிட் ஹமிடியின் இந்தியர் நலன்சார் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி தகவல்

புத்ராஜெயா,அக்.12-
உயர் கல்விக் கூடங்களில் கல்வியை தொடங்கவிருக்கும் 200 மாணவர்களுக்கு துணைப் பிரதமர் அலுவலகத்தின் சார்பில் உதவிகள் வழங்கப்பட்டதாக துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஜாஹிட் ஹமிடியின் இந்தியர் நலன்சார் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி கூறினார்.

துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஜாஹிட் ஹமிடியின் ஆலோசனையின் பேரில் இந்த உதவிகள் வழங்கப்பட்டது. கல்வி கட்டணம் உட்பட கற்றல் கற்பித்தலுக்கு தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டதாக அர்வின் அப்பளசாமி தெரிவித்தார்.

இந்திய மாணவர்கள் கல்வியில் சாதனை படைப்பதற்கு ஏழ்மை ஒரு தடையாக இருக்கக் கூடாது. அனைவருக்கும் கல்வி ஒரு அழியாத சொத்தாகும். இது அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் தாம் உறுதியாக உள்ளதாக அர்விந்த் அப்பளசாமி சொன்னார்.

இதன் அடிப்படையில் ஆரம்பப் பள்ளி முதல் உயர் கல்வி பயிலும் மாணவர்கள் வரை அனைவருக்கும் உரிய உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவிகள் எதிர்காலத்தில் தொடரும் என்று அர்விந்த் அப்பளசாமி கூறினார்.

இந்த உதவிகளை வழங்கிய துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஜாஹிட் ஹமிடி மற்றும் அதற்கு ஏற்பாடு செய்த அர்விந்த் அப்பளசாமி இருவருக்கும் மாணவர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button