Short News

ஜாலான் ஈப்போ, பேம்பு கார்டன் அருள்மிகு ஸ்ரீ விஜய துர்க்கை அம்மன் ஆலய நவராத்திரி விஜய தசமி விழா

கோலாலம்பூர்,அக்.11-
ஜாலான் ஈப்போ, ஜாலான் தெரோலாக், பத்து 4, தாமான் பேம்பு கார்டன் பகுதியில் அரசாங்கம் வழங்கிய நிலத்தில் கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அருள்மிகு ஸ்ரீ விஜய துர்க்கை அம்மன் ஆலயத்தில் இரவு 7.31 மணிக்கு நவராத்திரி விஜய தசமி விழா மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது.

இந்த அருள்மிகு ஸ்ரீ விஜய துர்க்கை அம்மன் ஆலயத்தில் 15ஆவது ஆண்டாக நவராத்திரி விழா நடைபெறவுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டுகளில் நவராத்திரி விஜய தசமி விழா மிகவும் சிறப்பாக நடைபெற்ற வேளையில் இவ்வாண்டு அதாவது அக்டோபர் 12ஆம் தேதி விஜய தசமி விழா மிகவும் கோலாகமாக நடைபெறவுள்ளதாக ஆலயத்தின் தோற்றுநர் துர்கா தெரிவித்தார்.

இந்த விஜய தசமி விழாவில் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் 200 குடும்பங்கள் கலந்து கொள்ள அழைக்கப்படுகின்றனர். மேல்விவரங்களுக்கு 011-65138989 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button