Short News

ஈப்போ லஹாட் ஶ்ரீ மஹா லக்ஷ்மி சமேத ஶ்ரீ சுந்தரராஜ‌ பெருமாள் ஆலயத்தின்‌ மகத்தான‌ புரட்டாசி திருவிழா சிறப்பாக நடைபெற்றது

ஈப்போ,அக்.11&
ஈப்போவில்‌ அமைந்திருக்கும் ஒரே வைணவ ஆலயமான‌ ஈப்போ லஹாட் ஶ்ரீ மஹா லக்ஷ்மி சமேத ஶ்ரீ சுந்தரராஜ‌ பெருமாளின் உன்னதத்தை எடுத்துரைக்கும் புரட்டாசி திருவிழா மிக சிறப்பாக நேற்று‌ நடைபெற்றது .

ஆலயத் தலைவர் தமிழ்ச்செல்வம் தலைமைத்துவத்தில்‌ஆலயத்தின்‌‌ திருவிழா‌ விமரிசையாக நடைபெற பக்தர்கள்‌ திரண்டரன்.

அதனுடன், ஆலயத்தின் திருவிழாவில் பாராயணம் கோமாதா பூஜை, சிறப்பு பூஜை, பெருமாள் ஶ்ரீதேவி பூதேவிக்கு திருக்கல்யாணம் சிறப்பாக‌ நடைபெற்றது.

இந்த திருவிழாவில் பக்தர்களுக்கு செல்லப்பா கேத்தரிங் சார்பாக சுவையான அன்னதானம் தமிழர் பண்பாட்டுடன்‌ வாழையிலையில் பரிமாறப்பட்டது.

பல ஆலயங்களுக்கு செல்லப்பா கேத்தரிங்‌ அன்னதானம்‌ வழங்கி வருகின்றனர்.

மேலும், ஆர்.கே‌.படிஸ்‌‌ குழுவினர் தண்ணிர்‌ பந்தல் அமைத்து பக்தர்களின்‌ தாகத்தை தீர்த்தனர்.

தொடர்ந்து ஆலயங்களிடையே இருக்கும் நட்பின் அடிப்படையில் லகாட்‌ லைன் ஶ்ரீ மஹா மாரியம்மன்‌ ஆலயத்தின்‌ மகளிரும் , புத்தோங்‌ மகா காளியம்மன்‌ ஆலயத்தினரும் சீர்வரிசைகளை கொண்டு வந்து செலுத்தினர்.

இதனுடன், ஆலய செயலாளர், பூமதி தமிழ்ச்செல்வம் ஆதரவு வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கு நன்றியை கூறினார்.

இந்த திருவிழாவில்‌ ஈப்போ கிந்தா சமூகநல , பண்பாட்டு , விளையாட்டு‌ சங்கத்தின் தலைவர் , பா.யுவராஜ், டத்தோ‌ ஷர்மா, பெண்‌ தொழிலதிபர், லோகம்மா ஆகியோர்‌ கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button