
Eventure Solutions நிறுவனத்தின் காதலிக்க நேரமில்லை இசை நிகழ்ச்சி 60,70 பாடல்களை கொண்டு வருகிறது விஜய் டிவி கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்
கோலாலம்பூர்,அக்.11-
Eventure Solutions நிறுவனத்தின் காதலிக்க நேரமில்லை இசை நிகழ்ச்சி அக்டோபர் 12ஆம் தேதி சனிக்கிழமை KLCC Plenary Hall மண்டபத்தில் இரவு 7.00 மணிக்கு மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
காதலிக்க நேரமில்லை இசை நிகழ்ச்சி 60 மற்றும் 70களில் வெளிவந்த பாடல்களை கொண்டு வரும் நிலையில் விஐய் டிவி இசைக்கலைஞர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்த காலிக்க நேரமில்லை இசை நிகழ்ச்சியில் கல்பனா ராகவேந்தர், சத்திய பிரகாஷ், மாளவிகா, சுந்தர், சைட் சுபஹான், முத்துசிற்பி, ஸ்ரீதர் செனா மற்றும் அனு ஆனந்த் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
இந்த இசை நிகழ்ச்சி தொடர்பில் செய்தியாளர்களை சந்தித்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் விஜய் டிவி கலைஞர்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்தனர்.

இந்த காதலிக்க நேரமில்லை இசை நிகழ்ச்சிக்கு மணி அண்ட் பேண்ட் இசைக்கலைஞர்கள் ரசிகர்களை இசை மழையில் நனயவைக்கவுள்ளனர். இந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள ரசிகர்கள் எம்.ஜி.ஆர் 249 வெள்ளி, சரோஜாதேவி 219 வெள்ளி, ஜெமினி 199 வெள்ளி, சிவாஜி 189 வெள்ளி, சாவித்திரி 169 வெள்ளி, பத்மினி 149 வெள்ளி மற்றும் கே.ஆர்.விஜயா 99 வெள்ளி விலையிலான டிக்கெட்டுகளை Ticket2u.com.my வாங்கிக் கொள்ளலாம்.
தொடர்புக்கு Mr.Sean -017-3007102, Gayathri 017-8668916