Short News
பத்து காஜா நகரத்தை அலங்கரித்த துரோனோ சட்டமன்ற உறுப்பினர் ஸ்டிவன் தியூ
ஈப்போ,அக்.24-
தீபாவளி என்றாலே அலங்காரம்தான் முதலிடம் வகிக்கிறது. அரசு துறைகள், தனியார் தங்களின் நேர்த்தியான பாரம்பரிய அலங்காரங்களை செய்து முத்திரை பதித்து வருகின்றன.
அந்த வகையில்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு
பத்துகாஜா நகரத்தை அலங்கரிக்கும் பணி மேற்கொள்ளப்படுவதாக துரோனோ சட்டமன்ற உறுப்பினர் ஸ்டிவன் தியூ கூறினார்.
இந்துக்களின் முதன்மை பண்டிகையான தீபாவளி முக்கியமான பண்டிகையாகும். அந்த வகையில் பத்துகாஜா நகரத்தை அலங்கரிக்பும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதால் தீபாவளியை முன்னிட்டு பத்துகாஜா நகரம் அலங்கரிப்பில் மின்னும் என்று துரோனோ சட்டமன்ற உறுப்பினர் ஸ்டிவன் தியூ நம்பிக்கை தெரிவித்தார்.
