குவாங் கம்போங் பூங்கா ராயாவில் ஏற்பட்ட மோசமான வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு டத்தோ சங்கர் ராஜ் ஐயங்கார் உதவிக்கரம் நீட்டினார்
ரவாங்,அக்.10-
குவாங் கம்போங் பூங்கா ராயாவில் ஏற்பட்ட மோசமான வெள்ளத்தால் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று சிலாங்கூர் மாநில மஇகா தலைவர் டத்தோ சங்கர் ஐயங்கார் கூறினார்.
கம்போங் பூங்கா ராயாவுக்கு அருகே ஆறு உள்ளது. மழை காலங்களில் ஆற்று நீர் அதிகரிப்பதால் இப் பகுதியில் வெள்ளப் பிரச்சினை ஏற்படுகிறது என்று டத்தோ சங்கர் ராஜ் தெரிவித்தார்.
இம்முறை மக்கள் மோசமான பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.
இதில் 60 குடும்பங்களில் கிட்டத்தட்ட 40 வீடுகளில் அனைத்து பொருட்களும் சேதமடைந்து விட்டன.
இதில் பாதிக்கப்பட்ட இம்மக்களின் பிரச்சினை செலாயாங் தொகுதி தலைவர் சிவஞானம் வாயிலாக என் பார்வைக்கு கொண்டு வரப்பட்டது.
உடனே ம.இ.கா சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மெத்தையும் கேஸ் அடுப்பும் அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டது.
அதே வேளையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் குறிப்பாக நட்மாவின் வாயிலாக உதவிகள் பெற்று தருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று டத்தோ சங்கர் ஐயங்கார் சொன்னார்
