Short News
தீபாவளி பண்டிகையை அன்பை பரிமாறி மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள் ஓங் பூன் பியோவ் தீபாவளி வாழ்த்து
ஈப்போ,அக்.24-
இந்துக்களின் முதன்மை பண்டிகையாக திகழும் தீபத்திருநாளில் மக்கள் அனைவரும் அன்பை பரிமாறி மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்று பெர்ச்சாம் சட்டமன்ற உறுப்பினர் ஓங் பூன் பியோவ் கூறினார்.
மலேசியர்கள் தீபாவளி பண்டிகையை ஒற்றுமை உணர்வுடன் கொண்டாட வேண்டும். மலேசியர்களாகிய நாம் அனைவரும் வழக்கமாகவே திறந்த இல்ல விருந்துபசரிப்புகளை நடத்தி தீபாவளி பண்டிகையை கொண்டாடுவார்கள் என்பதால் இந்த தீபாவளியை பண்டிகையை நாம் மலேசியர்களாக கொண்டாடி ஒற்றுமையை வலுப்படுத்துவோம் என்று கேட்டுக் கொண்ட பெர்ச்சாம் சட்டமன்ற உறுப்பினர் ஓங் பூன் பியோவ். இந்துக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
