Malaysia

மஞ்சோய் சுகாதார மருத்துவமனை இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும்

ஈப்போ,ஆக.19-.

மக்கள் அனைவரும் எதிர்பார்க்கும் ரி.26.23 மில்லியன் செலவில் கட்டப்பட்ட மஞ்சோய் சுகாதார மருத்துவமனை இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் உள்ள 40,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என மனிதவளம், சுகாதாரம், இந்திய சமூக விவகாரங்கள் மற்றும் தேசிய ஒருங்கிணைப்புக்கான பேராக் ஆட்சிக் குழு உறுப்பினர் ஏ. சிவனேசன் கூறினார்.

 

இந்த திட்டம் இப்போது 83 சதவீதத்திற்கும் அதிகமான முன்னேற்றத்தை எட்டியுள்ளது.

 

எனவே, ஐந்து மாடி சுகாதார மருத்துவமனை கட்டுமானத் திட்டத்தை இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் பேராக் மாநில சுகாதாரத் துறையிடம் (JKN) ஒப்படைக்க முடியும் என்று நம்பிக்கை கொண்டுள்ளதாக கூறினார்.

 

இந்த மருத்துவ மனை ஒப்பந்ததாரர் பொதுப்பணித் துறை (JKR) நிர்ணயித்த அட்டவணையைப் பின்பற்றுகிறார் என்பதை உறுதிப்படுத்தினார்.

 

தற்போதைய இந்த கட்டடத்தின் நிர்மாணிப்பு பணியில் திருப்தி அடைந்துள்ளோம் .

 

இருப்பினும் இந்த தாமதம் JKN ஊழியர்களையும், கம்போங் மஞ்சோய் பல்நோக்கு மண்டபத்தில் உள்ள தற்காலிக சுகாதார மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய பொதுமக்களையும் பாதித்துள்ளது,”

 

இந்த தாமதத்திற்கு மாநில அரசின் சார்பில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் இன்று இங்குள்ள மஞ்சோய் சுகாதார மருத்துவமனை திட்ட இடத்திற்கு பணி வருகையை புரிந்தப் பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

 

 

கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் வடிவமைப்பு மாற்றங்கள் உள்ளிட்ட பல தொழில்நுட்ப சிக்கல்கள் போன்ற காரணங்களால் இத்திட்டம் தாமதமாகியது என்று அவர் விளக்கினார்.

 

இதற்கிடையில், மாநிலத்தில் பல சுகாதாரத் திட்டங்களும் சீராக முன்னேறி வருவதாகவும், பாரிட் புந்தர் மருத்துவமனை மற்றும் பங்கோர் சுகாதார மருத்துவமனை உட்பட, எதிர்காலத்தில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் சிவநேசன் தெரிவித்தார்.

 

“கூடுதலாக, கிரீன் டவுன் சுகாதார மருத்துவமனை மேம்படுத்தல் திட்டமும் இந்த ஆண்டு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் ஸ்ரீ இஸ்கந்தர் மருத்துவமனை ஏற்கனவே முழுமையாக செயல்பட்டு வருகிறது.

“இந்த வளர்ச்சியின் விளைவாக, பேராக்கில் உள்ள சுகாதார அமைப்பு மிகவும் திறம்பட செயல்படும்,” என்று அவர் கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button